Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து. வ.கௌதமன்.

Stills by Stills
21/06/2024
in இந்தியா
0
“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து.  வ.கௌதமன்.
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது கள்ளக்குறிச்சியில் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் செத்து, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற செய்தி இதயத்தில் ஈரம் உள்ளவர்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இம்மாபெரும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையேல் ஓரிரு தினங்களுக்குள் பூரண மதுவிலக்கினை பிரகடனப்படுத்த வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அரசு என்பது அந்த நிலத்தில் வாழ்கின்ற குடிமக்களை காப்பதற்குத்தானே தவிர குடிக்க வைத்து கூட்டம் கூட்டமாக கொல்வதற்கு அல்ல என்பதை இனியாவது தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 200 நபர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கல்வராயன் மலையில் நீண்ட நெடுங்காலமாக கள்ளச்சாராயம்  காய்ச்சுவது, அரசுக்கும் காவல்துறைக்கும் அவ்வப்போது ஆட்சி செய்கின்ற அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தே திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்ற இந்த வியாபாரத்தை இனியும் மூடி மறைக்க முடியாது. எத்தனையோ முறை பொதுமக்கள் தடுத்தும், அதிகார வர்க்கத்திடம் முறையிட்டும் கூட கண்டு கொள்ளாமல் போனதால்தான் இன்று கள்ளக்குறிச்சி சுடுகாடாக மாறி ஒப்பாரி வைத்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழினத்தின் சங்க கால போர்களில் சண்டையிட்டு செத்ததை விட நிகழ்கால அரசுகள் நடத்துகின்ற ஃபாரிலும், பீரிலும் செத்துக் கொண்டிருக்கின்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசு சாராயக்கடையை மூடினால் கள்ளச்சாராயம் தலைவிரித்தாடும் என்கிறீர்கள். அரசு நிறுவனம் காய்ச்சி விற்கின்ற சாராயமே ஆறாக ஓடிக்கொண்டிருக்கும்போது, அரசின் தயவால் அயோக்கியர்கள் காய்ச்சி விற்கின்ற கள்ளச்சாராயம் கடலளவு வியாபாரம் நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பக்கம் கள்ளச்சாராயம் குடித்து இப்படி அவ்வப்போது செத்து எண்ணற்ற பெண்கள் கத்தி கதறி தாலியறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நல்ல சாராயம் என்று கூறி டாஸ்மாக்கில் விற்கின்ற சாராயத்தைக் குடித்து லட்சக்கணக்கான பெண்கள் நீண்ட நெடுங்காலமாக தாலியறுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நிலை எப்பொழுது மாறும்?

கழக ஆட்சி அமைந்தால் முதல் கையெழுத்தே மதுவிலக்காகத்தான் இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதியினை இனி எந்த கல்வெட்டில் எழுதி வைப்பது? ஒரு குடும்பத் தலைவன் இறந்தால் ஒரு தலைமுறையே அழிந்துவிடும். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாழ நான்கு தமிழ் தலைமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டது. இன்று கண் துடைப்புக்காக கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றப்படுகிறார்கள். இதுதான் தண்டனையா? இதனால் நிரந்தர தீர்வு வந்துவிடுமா? இந்த லட்சணத்தில் மதுவிலக்கிற்கென்று ஒரு அமைச்சர் வேறு? இத்தனை பலி வாங்கியதில் மாவட்ட நிர்வாகத்திற்கு மட்டும்தான் பங்கு உண்டு என்றால் மாநிலத்தை ஆளும் நிர்வாகத்திற்கு பங்கு இல்லையா என்ன?. அரசின் கவனக்குறைவால் மக்கள் செத்தால் மக்களின் வரிப்பணத்தை எடுத்து நிவாரணம் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகா?. மாறாக இதற்கு தார்மீக பொறுப்பான அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சம்பளத்திலிருந்து ஏன் இனி எடுத்துத் தரக்கூடாது?.
இதற்கெல்லாம் தண்டனையாக நீங்கள் பதவி கூட விலக வேண்டாம். அதற்குப்பதிலாக தமிழ்நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்டு வரும் போது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்குப் போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, அதை மட்டுமாவது உடனே நிறைவேற்றுங்கள். உங்கள் தலைமுறை நன்றாக இருக்கும். விலை மதிக்க முடியாத 50க்கும் மேற்பட்ட உயிர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்வது மனித இயல்பு அதற்கு பரிகாரம் உண்டு. ஆனால் பாவத்திற்கு என்றுமே விமோசனம் கூட இல்லை.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
சென்னை
20 06 2024

Tags: வ.கௌதமன்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

அடுத்த செய்தி

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

குடிச்சிட்டு வந்து மனைவியை திட்டினால் இனி ஜெயில் தான்! – புதிய பிஎன்எஸ் சட்டத்தின் அதிரடி விதிகள்

குடிச்சிட்டு வந்து மனைவியை திட்டினால் இனி ஜெயில் தான்! – புதிய பிஎன்எஸ் சட்டத்தின் அதிரடி விதிகள்
by கண்ணன்
13/12/2025
0

சென்னை, டிசம்பர் 13, 2025: புதிய பாரதிய நியாய சமிதா (BNS) சட்டத்தின் கீழ், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது போதையில்...

மேலும்...

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது!

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது!
by கண்ணன்
13/12/2025
0

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது! சென்னை, டிசம்பர் 13, 2025: தமிழகத்தின் பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று...

மேலும்...

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!

இந்தியாவின் ‘ககன்யான்’ கனவுத் திட்டம் இறுதி ஆளில்லா சோதனையோட்டம் (G1) மாபெரும் வெற்றி!
by கண்ணன்
12/12/2025
0

ஸ்ரீஹரிகோட்டா, டிசம்பர் 12, 2025 இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ - ISRO), மனிதர்களை விண்வெளிக்கு...

மேலும்...

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!

“வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை” – திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு!
by கண்ணன்
11/12/2025
0

"வரலாறு படைக்கத் தயாராகும் இளைஞர் படை" - திருச்சியில் சீமான் தலைமையில் மாணவர் பாசறை மாபெரும் கலந்தாய்வு! திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர்...

மேலும்...

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!

2026 தேர்தலை நோக்கி தவெக – கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிரடி தீர்மானங்கள்!
by கண்ணன்
11/12/2025
0

இடம்: பனையூர் தலைமை அலுவலகம், சென்னை. தலைமை: பொதுச்செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) முன்னிலையில், கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...

மேலும்...

மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள் – முக்கிய சுரங்கப்பாதை இணைப்பு இன்று நிறைவு

மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள் – முக்கிய சுரங்கப்பாதை இணைப்பு இன்று நிறைவு
by கண்ணன்
11/12/2025
0

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நகரின் மிக முக்கியப் பகுதிகளை இணைக்கும் ஒரு சவாலான சுரங்கப்பாதைப் பணி இன்று...

மேலும்...
அடுத்த செய்தி
கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

கடலில் மிதந்த திரவத்தை அருந்திய இருவர் பலி  நால்வர் கவலைக்கிடம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

16/12/2025
கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

16/12/2025
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

16/12/2025
தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

16/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us