கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று, அதே கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக சளி தொந்தரவால் இவர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்த நிலையில், தான் பணியாற்றிய அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சிந்து. காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை மாணவியின் உயிர் பிரிந்துள்ளது.
சமீபமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெங்குவால் இறந்துவிட்டாரா என்று உறவினர்கள் அஞ்சிய நிலையில், மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி மாணவி சிந்துவை பரிசோதித்ததில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட சோதனைகளில் நெகட்டிவ் என்று வந்ததாகவும், டைபாய்டால் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
Good article and right to the point. I don’t know
if this is truly the best place to ask but do you people have any thoughts on where to employ some professional writers?
Thank you 🙂 Escape rooms