Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home சினிமா

பிக் பாஸ் சீசன்-7 முழு விவரம்.!

Stills by Stills
01/10/2023
in சினிமா
0
பிக் பாஸ் சீசன்-7 முழு விவரம்.!
0
SHARES
13
VIEWS
ShareTweetShareShareShareShare

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியுடன் பட்டையை கிளப்பும் பர்ஃபார்மன்ஸை கொடுத்து நள்ளிரவு வரை சென்ற ஷூட்டிங்கின் முடிவில் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த முறை யாரெல்லாம் சென்றுள்ளனர் என்பது குறித்த முழு 18 பேர் கொண்ட பட்டியல் தற்போது இணையத்தில் வழக்கம் போல கசிந்துள்ளன. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 18 பேர் பற்றிய முழு விவரம் பார்க்கலாம்..
கூல் சுரேஷ்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் நபராக உள்ளே நுழைந்திருப்பது வெந்து தணிந்தது காடு பிக் பாஸ் வீட்டுக்கு வணக்கத்தை போடு என அதகளப்படுத்தும் போட்டியாளர் கூல் சுரேஷ். சமீபத்தில் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய கூல் சுரேஷுக்கு சர்ச்சை நாயகன் என்கிற கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டுக்கு நுழைய அனுமதி கிடைத்ததா? அல்லது சிம்பு நண்பர் என்பதால் கிடைத்த சிபாரிசா என தெரியவில்லை. சென்ற முறை ஜிபி முத்து உள்ளே போனது போல இந்த முறை கூல் சுரேஷை முதல் போட்டியாளராக உள்ளே அனுப்ப முடிவு செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது.

“அராத்தி”பூர்ணிமா ரவி: டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி நரிக்கூட்டம் யூடியூப் சேனல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். அராத்தி எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து இவர் செய்த காமெடி சேட்டைகள் பலரையும் ஈர்த்து சில குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தன. பிக் பாஸ் வீட்டுக்கு 2வது போட்டியாளராக இவர் உள்ளே நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

ரவீனா தாஹா: 3வது போட்டியாளராக மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹா உள்ளே நுழைந்திருப்பதாக ஒற்றர்கள் செய்தி அனுப்பி உள்ளனர். ராட்சசன் படத்தில் சிறுமியாக நடித்த இவர் ஏகப்பட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பிரதீப் ஆண்டனி: 4வது போட்டியாளராக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளாராம். அருவி படத்தின் உதவி இயக்குநரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி வாழ், டாடா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து பெருசா சாதிக்க முடியாத நிலையில், கவினின் நண்பரான இவர் பிக் பாஸ் பிளாட்ஃபார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளார். நிக்ஸன்: போன சீசனில் ஏடிகே உள்ளே சென்றதை போல இந்த சீசனிலும் பாட்டுப் பாட ஒருத்தர் வேண்டும் என்பதால் ராப் பாடகர் நிக்ஸனை உள்ளே 5வது போட்டியாளராக அனுப்பி உள்ளார்களாம்.

வினுஷா தேவி: பாரதி கண்ணம்மா 2 சீரியல் பாதியிலேயே நின்ற நிலையில், வாய்ப்புத் தர நாங்க இருக்கோம் என பிக் பாஸ் வீடு நடிகை வினுஷா தேவியை 6வது நபராக உள்ளே அழைத்துக் கொண்டதாம்.

மணிச்சந்திரா: அமீர், ராபர்ட் மாஸ்டர் வரிசையில் இந்த முறையும் நடன கலைஞர் ஒருவரை உள்ளே அனுப்பி உள்ளனர். மணிச்சந்திரா என்கிற இந்த போட்டியாளர் 7வதாக உள்ளே நுழைந்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அக்‌ஷயா உதயகுமார்: இந்த சீசனில் இளைஞர்களை கவர ஏகப்பட்ட மாடல்களும் சின்னத்திரை நடிகைகளும் களமிறங்கி உள்ளனர். லவ் டுடே படம் மற்றும் மலையாள படமான சித்தி படத்தில் இவர் நடித்துள்ளார். 8வது நபராக கமல்ஹாசனின் வாழ்த்துக்களை பெற்று பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

ஜோவிகா விஜயகுமார்: 3வது சீசன் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு அதிரடி கிளப்பிய வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார். பாவம் என்ன என்ன ட்ரோல்களுக்கு ஆளாக போகிறார் என்று தெரியவில்லை. 9வது நபராக உள்ளே நுழைந்திருக்கிறாராம்.

ஐஷு: 10வது நபராக அமீரின் உறவினரான ஐஷு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளாராம். நடன கலைஞரான இவர் டான்ஸ் vs டான்ஸ் போட்டியிலும் ஏற்கனவே பங்கேற்றுள்ளார்.
மாயா கிருஷ்ணன்: விக்ரம் படத்தில் ஆ.. ஹூ.. என சவுண்ட் போட்டே ரசிகர்களை வசீகரித்த நடிகை மாயா கிருஷ்ணன் 11வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாயா கிருஷ்ணன்: விக்ரம் படத்தில் ஆ.. ஹூ.. என சவுண்ட் போட்டே ரசிகர்களை வசீகரித்த நடிகை மாயா கிருஷ்ணன் 11வது நபராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சரவண விக்ரம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் சரவண விக்ரம் எப்படியாவது ஹீரோவாகி விடலாம் என்கிற முயற்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் 12வது நபராக நுழைந்திருப்பதாக கூறுகின்றனர்.

விசித்ரா: முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக இருந்த விசித்ரா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி புராடக்ட்டாகவே மாறிய நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு 13வது நபராக என்ட்ரி கொடுத்துள்ளார். எத்தனை வாரங்கள் தாக்குப் பிடிப்பார் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

பவா செல்லதுரை: பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை இந்த முறை திடீர் சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டுக்குள் 14வது போட்டியாளராக நுழைந்திருக்கிறார். ஆனால், இவரும் எத்தனை வாரங்கள் உள்ளே இருப்பார் என்பது கேள்வி குறிதான்.

அனன்யா ராவ்: கன்டென்ட் க்ரியேட்டரான அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டுக்கு 15வது போட்டியாளராக வந்திருப்பதாக கூறுகின்றனர். நெட்பிளிக்ஸின் இன் ரியல் லவ் சீரிஸ் மூலம் பிரபலமானவர். அழகான போட்டியாளரை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு கிடைத்த செம ஆஃபர்.

விஜய் வர்மா: 16வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் விஜய் வர்மாவும் ஒரு நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ இந்த முறை டெய்லி காலையில டான்ஸ் ஷோ கன்றாவியா இருக்காது.

விஷ்ணு விஜய்: ஆபிஸ், சத்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அமுல் பேபி விஷ்ணு விஜய் 17வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது.

யுகேந்திரன்: பாடகர் யுகேந்திரன் 18வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறாராம். பப்லு பிரித்விராஜ், தர்ஷா குப்தா, இந்திரஜா, ஷாம், அப்பாஸ், சோனியா அகர்வால், ஸ்ரீதேவி, கெளசல்யா உள்ளிட்ட பல பிரபல பெயர்கள் அடிபட்ட நிலையில், அவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. இதே ஆர்டரில் போட்டியாளர்கள் வருவார்களா? அல்லது சிறிது மாற்றங்கள் நடக்குமா என்பதை இன்று மாலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Tags: 18 பேர்பற்றியவிவரம்பிக் பாஸ் சீசன் 7
ShareTweetShareShareSendSend
Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் சார்பில் முல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் ….

Next Post

மட்டக்களப்பில் 10 பவுண் நகைகள் கொள்ளை ; சந்தேக நபர் தப்பியோட்டம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !
by கண்ணன்
21/01/2026
0

தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைக்கதைக்கும், யதார்த்தமான இயக்கத்திற்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் எச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், 'தீரன் அதிகாரம் ஒன்று'...

Read more

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது.!

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி  வெளியாக உள்ளது.!
by Stills
17/07/2025
0

2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த அதர்வாவின்‘தணல்’திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ளதிரைப்படம்  வெளியாக உள்ளதாக படக்குழு...

Read more

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…
by Stills
04/12/2024
0

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!
by Stills
05/07/2024
0

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

Read more

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!
by Stills
29/06/2024
0

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என...

Read more

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
by தரணி
20/04/2024
0

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த பிரபல தாயகப்பாடகர்...

Read more
Next Post
மட்டக்களப்பில் 10 பவுண் நகைகள் கொள்ளை ; சந்தேக நபர் தப்பியோட்டம்.

மட்டக்களப்பில் 10 பவுண் நகைகள் கொள்ளை ; சந்தேக நபர் தப்பியோட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

23/07/2026
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

09/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.