நேபாளஜஜரகோட் மலைப்பகுதி நகரான சுமார் 200,000க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி அருகிலேயே பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூகம்பம் காரணமாக 128க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.வீடுகள் இடிந்து விழுந்தன பல மைல்களிற்கு அப்பாலும் அதிர்வை உணர முடிந்தது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜஜரகோட் பகுதியில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த பகுதியை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ருகும் மேற்கு மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஜஜரகோட்டில் 140க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பூகம்பம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்றிவிட்டே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு செல்லவேண்டியுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள பூகம்பம் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என காத்மண்டுவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கையர்கள் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து வெகுதொலைவிலேயே வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் வசிக்கின்றனர் இவர்களில் 40 மாணவர்;கள் பொக்காராவிலும் பத்துபேர் காத்மண்டுவிலும் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ள தூதரகம் சர்வதேச அமைப்புகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் காத்மண்டுவிலேயே வாழ்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் பெருமளவு இலங்கையர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா செல்வது வழமை இவர்கள் சில நாட்கள் லும்பினியில் தங்கியிருப்பார்கள் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜஜரகோட் அதிகாரியொருவர் நானே திறந்தவெளியிலேயே தங்கியுள்ளேன் நாங்கள் தகவல்களை பெறுகின்றோம் ஆனால் குளிர் இரவு காரணமாக தொலைதூரங்களில் இருந்து தகவல்களை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
புதுடில்லி உட்பட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது