யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நாளை திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடரச்சியாக இரு நாட்களுக்கு இன்றும் நாளையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரைப்பகுதி போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நாளை திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. போராட்டம் சிலவேளை தொடர்ச்சியாக இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.