இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது. மூன்று வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் தெரிவிக்கும்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் இழப்பு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். – சீமான்
ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ...
மேலும்...