Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

Stills by Stills
19/05/2025
in இந்தியா
0
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
0
SHARES
8
VIEWS
ShareTweetShareShareShareShare

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த இவர்.. இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் ஹிசாரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே மாறும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது உளவு பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உளவாளி உறுதியான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கினால் அவர் உளவு அசெட்டாக மாறுவார். அதாவது உளவு பார்க்கும் நாட்டின் சொத்து. அவருக்கான செலவுகள், தேவைகளை அந்த நாடு பார்த்துக்கொள்ளும். அதோடு அந்த உளவாளி கண்டுபிடிக்கப்படும் நிலை இருந்தால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு நாட்டிற்கு நாடு கடத்தும். சொந்த நாட்டிற்கே கூட அந்த உளவாளியை அழைத்துக்கொள்ளும்.
இப்படி இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்த பாகிஸ்தான் குடிமகன்கள்.. இப்போது இந்தியா கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். அப்படித்தான் பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே ஜோதி மாறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் உளவாளிகளுடன் இவர் தீவிர நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதியிடம் நேரடியாக உறுதியான பாதுகாப்பு துறை தகவல்கள் எதுவும் இல்லை. அவரால் அந்த உளவு தகவல்களை சேகரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது?

‘டிராவல் வித் ஜோ மற்றும் ‘nomadic Leo girl wanderer’ என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான அந்த பெண் பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை அனுப்பி உள்ளார். பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள எஹ்சான்-உர்-ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை இவர் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக ஜோதி ராணி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக விசிட் சென்றதாக கூறப்படுகிறது. பயண வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு அங்கே பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை சந்தித்து உள்ளார்.

சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டார். தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார், அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது வெளியாகவில்லை. இந்தியாவின் உத்தரவில் அந்த பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு கடத்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று தெரிய வந்துள்ளது. இவர்தான் தூதரக அதிகாரி என்ற பெயரில்.. இந்தியாவிற்குள் உளவு பார்த்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால்தான் ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அதிகாரி வழியாக.. பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை இவர் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது
முக்கியமாக மக்கள் அதிகம் கூடும்.. சுற்றுலா தலங்கள், பாதுகாப்பு தளவாடகங்கள் இருக்கும் இடங்கள், கட்சி கூட்டங்கள் பற்றிய தகவல்களை இவர் பகிர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை உளவு பார்த்து இருக்கிறார். ஜோதி வழியாக இந்த உளவு தகவல்களை அவர் பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையின் போது,​​ஜோதி மல்ஹோத்ரா போலீசாரிடம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு நாட்டிற்கு வருகை தர விசா பெறச் சென்றதாகவும், அப்போது ரஹீமை சந்தித்து அவருடன் பேசத் தொடங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், ரஹீம் வழியாக அலி அஹ்வான் என்ற பாகிஸ்தான் நபரை சந்தித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அங்கே பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பரை இந்துக்களின் பெயரில் தனது போனில் பதிவு செய்துவிட்டு, இந்திய ராணுவம் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டதாகவும், தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்தியாவிற்கு எதிரான பல தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறி உள்ளார். பாகிஸ்தானுக்கு டிராவல் செய்வது போல பயணம் செய்து அங்கே உள்ளே பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து பல முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags: உளவவாளியானதுபாகிஸ்தானின்யூ டியூபர்ஜோதிராணி
ShareTweetShareShareSendSend
Previous Post

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

Next Post

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more
Next Post
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

23/07/2026
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us