ஒருகனம் தாயவள்
மறுஜென்மம் பிரசவம்
மறுகனம் தந்தையவர்
உயிர்பெறும் தரிசனம்..!
அடுத்த தலைமுறை
அடிநோக்கும் பெறும்பேறு
பெருஞ்செல்வ சொத்தன்றோ
பெற்றிடும் பிள்ளைப்பேறு..!
எத்தனை சொத்துக்கள்
சேர்த்தாலும் பேசாதே
முத்துச் சொற்களால்
முகம்மலரும் பேச்சாலே..!
வாழையடி வாழையாய்
வாழ்வுதரும் சொந்தமே
வாசம்வீசும் உறவிலே
வாழுமிந்த பந்தமே..!
தலைமுறை மூன்று
தழுவியே வாழும்
விலையென்ன கொடுப்பினும்
விடைபெறா உறவுகள்..!
அபிராமி கவிதன்.