தாத்தாவிற்கு ஒரு தாலாட்டு….
கற்பகம் பெற்ற
கடைசி முத்தே
அற்புதமாய்க் கல்வியில்
உயர்ந்து நின்றீர்
சுங்கத்தில் உமக்குச்
சிங்காரப் பதவி
சிங்கமாய் இருந்தீர்
சொந்தங்கள் நடுவே
கண்படும் அளவிற்குக்
கடவுளும் தந்தார்
எண்பதைத் தாண்டி
ஏற்றமாய் வாழ்ந்தீர்
புண்பட யாரையும்
பேசியதே இல்லை
மண்ணினை விட்டு
மறைகிறீர் இன்று
நாவலடிப் பிள்ளையாரின்
நலனைப் பெருக்க
ஆவலாய் இருந்தீர்
அண்மைப் பொழுதாய்
தேவர் உலகிலும்
தெய்வத்துடன் அமர்ந்து
நாவலடிப் பந்தங்களிற்கு
நன்மையைத் தாரும்
கட்டிடும் கோவில்
காலத்தில் நிலைத்து
எட்டுத் திக்கிலும்
உம்பெயர் சொல்லும்
தொட்டிட முடியாத
தூரமாய்ச் சென்றாலும்
கட்டிக் காத்திடுவீர்
கற்பக பூமியை.
-அபிராமி கவிதன்-