கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பிரஜைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பொது நிதியாக வழங்கி, குற்றச் செயலில் ஈடுபட்டதாக தினியாவல பாலித தேரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் என்ற வகையில், எவ்வித அங்கீகாரமும் இன்றி, இலங்கை மத்திய வங்கிக்கு பாகிஸ்தான் பிரஜைக்கு குறித்த தொகையை வழங்குமாறு, உடன்படிக்கை செய்துகொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த முறைப்பாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி இந்த வழக்கை இன்று புதன்கிழமை (4) தள்ளுபடி செய்யுமாறு நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.