அமரர் லட்சுமிதேவி தங்கத்துரை
அன்புடையீர்! கடந்த 29.11.2023 அன்று சிவபதமடைந்த எமது அம்மாவின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30.12.2023 அன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் எமது இல்லத்தில் (J & J Swagt Convention Center, 415 Hood Rd #22 Markham, ON L3R 3W2) நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகைதந்து அம்மாவின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எங்கள் அம்மாவின் துயரச் செய்தி கேட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி ஆறுதல் சொன்னவர்களுக்கும், நேரில் வருகை தந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மருத்துவர்கள், தாதிமார்களுக்கும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு மாதம் என்ன ஓராயிரம் ஆண்டுகள் நகர்ந்தாலும்…
எமைவிட்டு உங்கள் நினைவுகள் அகலாது அம்மா!
அம்மா! உங்கள் நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து
கண்கள் நீர் சொரிந்து நிற்கின்றோம் அம்மா!
அயலவர்களையும், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் இன்முகம் காட்டி
உபசரித்து, விருந்தளித்து மனதால் மகிழ்ந்து
உளமாற நேசித்து மன மகிழ்வுடன் வாழ்ந்த எங்கள் அன்னையே..!
மண்ணுலகை விட்டு நீங்கள் விடை பெற்றாலும்,
எங்கள் மனதை விட்டு ஒருபோதும் அகலமாட்டீர்கள் அம்மா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நன்றி
இங்கனம்
குடும்பத்தினர்.