பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) மிஹிந்தலை புனித பூமியில் இருந்து இராணுவத்தினரை அகற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்தெரிவித்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயேஅரசியலமைப்பினூடாக பௌத்தம் காக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுதான் இந்த நாட்டின் சட்டம். அதனை மறந்து செயற்படக்கூடாது. எனவே பிழையான கருத்தை தெரிவித்து மோசமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய முப்படையினருக்கு களங்கம் வரும் வகையில் செயலாற்ற வேண்டாம் மிஹிந்தலை புனித பூமியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய இருவரை கைது செய்த காரணத்தால், பொலிஸ்,இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 250 உத்தியோகத்தர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பது பாரிய குற்றமாகும். அது தொடர்பில் எமது கவலையை தெரிவி்க்கிறோம் என்றார்.
மிஹிந்தலை புனித பூமியை பாதுகாக்கும் கடமையில் பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் சிவல் பாதுகாப்பு படையினர் பாரிய சேவையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு தெரியாத 2 பேர் அங்கு இரகசியமாக மறைந்திருப்பதாக பொலிஸாரே கைது செய்துள்ளனர். மஹாநாயக்க தேரருக்கும் தெரியாமலே அங்கு தங்கி இருந்துள்ளனர். இவ்வாறு இரகசியமாக மறைந்திருந்த 2பேரை கைது செய்தமைக்காக, புனித பூமியில் சேவை செய்துவந்த 250 பாதுகாப்பு படையினரையும் அங்கிருந்து நீக்கிக்கொள்வதாக இராஜாங்க அமைசசர் தெரிவிப்பது மிகவும் மோசமான கூற்றாகும்.
அரசியலமைப்பினூடாக பௌத்தம் காக்கப்பட வேண்டும்.அதுதான் இந்த நாட்டின் சட்டம். அதனை மறந்து செயற்படக்கூடாது. எனவே பிழையான கருத்தை தெரிவித்து மோசமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய முப்படையினருக்கு களங்கம் வரும்என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார். அப்போ தமிழர்களின் பாதுகாப்பு யாரிடம் கேட்பது.அவர்களுக்கான சட்டம் என்ன? பாராளுமன்றத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு என்னவேலை?
10 இடங்களில் மாவீரர் நாள் புலிகளின் சின்னம்.!
நேற்று(4) புதன்கிழமை பாராளுமன்றத்தில் "நவம்பர் மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரையான மாவீரர் நாள் வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
மேலும்...