இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்துள்ளதுஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT எனப்படும் தொலைநோக்கி உலகிலேயே முதல் முறையாக இந்தப் புகைப்படங்களை சூரியனுக்கு 200 முதல் 400 நேனோமீட்டர் அலைநீள அளவிற்கு அருகே சென்று படம் பிடித்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் மூலம் சூரியனின் ஒளிமண்டலம் (Photosphere), புற வளிமண்டலம் (Chromosphere) ஆகிய மேற்பரப்புகள் பற்றி நுண்ணிய தகவல்களைப் பெற முடியும்.ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாகக் கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் சூரிய புற ஊதா தோற்றுருவாக்கல் தொலைநோக்கி (Solar Ultra Violet Imaging Telescope) படம் பிடித்துள்ளது.