இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ள அவர் யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.