Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Stills by Stills
07/02/2025
in இந்தியா
0
இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare

சட்டவிரோதமாக குடியேறிய 104இந்தியர்கள் இந்தியாவுக்கு அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை,கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

வழக்கமாக விமான போக்குவரத்தின்போது பரிமாறப்படும் உணவு வகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கழிப்பறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு இந்தியரிடமும் தனியாக விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றார்கள், அவர்களை அனுப்பிய ஏஜெண்ட் யார் என்பது குறித்து கேட்டறியப்படுகிறது. அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் விமானத்தில் உடனடியாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள். உக்ரைன் போரின்போது அங்கு கல்வி பயின்ற இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் பிடிபட்டால் அவர்களை பாதுகாப்பாக, கவுரவமாக இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக புதிய சட்டத்தில் பல்வேறு விதிகள் வரையறுக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசிடம் ஏற்கெனவே விரிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இதன் அடிப்படையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: அரசுஇந்தியர்களின்என்னசெய்யப்நலனுக்காகபோகிறதுமோடி
ShareTweetShareShareSendSend
Previous Post

பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை

Next Post

அகில இலங்கை பௌத்த சம்மேளத்தின் தலைவரது அதிர்ச்சிதரும் பின்னணி

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post

அகில இலங்கை பௌத்த சம்மேளத்தின் தலைவரது அதிர்ச்சிதரும் பின்னணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us