Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை

Stills by Stills
07/02/2025
in இந்தியா
0
பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவ்வாறு வந்திறங்கியவர்கள் பலரும் கூறும் கண்ணீர் கதை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜன்ட்டுகள் மீதான நடவடிக்கைகளை அரசு கடுமையாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான லவ்ப்ரீத் கவுர் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தனது மகனுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். இவரது கணவர் அங்கு சில ஆண்டுகளாக வேலை செய்துவரும் நிலையில் கணவருடன் இணைந்து வாழும் விருப்பத்தில் மகனுடன் புறப்பட்டுள்ளார்.
இதற்காக லவ்ப்ரீத் குடுபத்தினர் ரூ.1.05 கோடி பணத்தைத் திரட்டி ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளனர். மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பத்திரமாக அமெரிக்காவுக்குள் சேர்ப்போம் என்பதே அவர்களுக்கு ஏஜென்ட்டுகள் சொன்னது. ஆனால் அவர் ‘டங்கி ரூட்’ என்றழைக்கப்படும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்வோரின் பாதையில் மிகக் கடுமையான சவால்களுக்கு இடையே பயணிக்கும்படி செய்யப்பட்டுள்ளார். இதனால் இப்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கணவருடன் சேர வேண்டும் என்பதற்காக லவ்ப்ரீத் தெரிந்தே இதற்கு ஒப்புக் கொண்டாரா இல்லை அவர் ஏமாற்றப்பட்டாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், லவ்ப்ரீத் ஓர் ஊடகப் பேட்டியில், “எங்களை நேரடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதாகவே ஏஜென்ட் கூறினார். ஆனால் எதிர்பாராமல் இவ்வாறு நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் லவ்ப்ரீத், மகனுடன் கைது செய்யப்பட்ட தகவலை கபூர்தலாவில் உள்ள பெற்றோருக்கு லவ்ப்ரீத்தின் கணவர்தான் தெரிவித்துள்ளார். லவ்ப்ரீத் நாடுகடத்தப்பட்டதையும் அவர் உறுதி செய்துள்ளார். இது குறித்து கபூர்தலா பஞ்சாயத்துத் தலைவர், “லவ்ப்ரீத் பயணத்துக்கான பணத்தை அமெரிக்காவில் உள்ள அவரது கணவரே ஏற்பாடு செய்தார். போதாததற்கு நிலத்தை அடமானம் வைத்தும் கடன் பெற்றனர்.” என்று ஊடகங்களிடம் கூறினார்.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட லவ்ப்ரீத் முதலில் கொலம்பிய குடியரசில் உள்ள மெடலின் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து எல் சால்வடாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து 3 மணி நேரம் நடைபயணமாக கவுதேமாலாவுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மெக்சிகோ எல்லைக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர். மெக்சிகோ – அமெரிக்கா எல்லையிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தவர்கள் கடைசியாக ஜனவரி 27-ல் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டோம் இனி கணவருடன் சேர்ந்துவிடலாம் என லவ்ப்ரீத் எண்ணியுள்ளார். ஆனால் அங்கே அவருக்கு நடந்ததோ வேறு.

இது குறித்து அவர், “நாங்கள் அமெரிக்காவுக்குள் சென்றபோது அவர்கள் எங்கள் ஃபோனின் சிம் கார்டை அப்புறப்படுத்தச் சொன்னார்கள். மேலும் கம்மல், வளையல் என அனைத்து ஆபரணங்களையும் கழற்றி ஒப்படைக்கச் சொன்னார்கள். ஏற்கெனவே வேறொரு நாட்டில் என் உடைமைகள் அனைத்தும் தொலைந்துபோனது. இந்நிலையில் முகாமுக்குச் செல்லும் முன் எல்லாவற்றையும் இழந்தேன். முகாமில் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டோம். பிப்ரவரி 2-ம் தேதி நாங்கள் கைது செய்யப்படுவதாகக் கூறினர். எங்கள் கைகள், இடுப்பு, கால்களில் விலங்கிட்டனர். குழந்தைகளுக்கு மட்டுமே விலங்கிடவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக 40 மணி நேர விமானப் பயணத்தில் நாங்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்றுகூட எங்களிடம் யாரும் சொல்லவில்லை. இறுதியாக நாங்கள் இந்தியா வந்தடைந்ததாகச் சொல்லப்பட்டது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அமெரிக்காவுக்குச் சென்று கணவர், குடும்பம் என வாழக் கண்ட கனவு எல்லாம் நொறுங்கிப்போனதை உணர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.
Tags: கண்ணீர்க்கதைபஞ்சாப்பெண்ணின்
ShareTweetShareShareSendSend
Previous Post

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.!

Next Post

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post
இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us