Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

Stills by Stills
12/06/2025
in இலங்கை
0
ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!
0
SHARES
4
VIEWS
ShareTweetShareShareShareShare

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அளித்த முறைப்பாட்டிற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதியமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரத்தியேக விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதற்கமைய ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.

அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக , “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக” என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலகம்
கடந்த ஆறாம் திகதி (06.06.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட அத்துல திலக்கரத்ன என்ற நபர் தற்போது அந்த பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருவதுடன் அடுத்த வழக்கு விசாரணையின்போது  நிதிமன்றம் மற்றும் முழு நாடும் ஆச்சரியமடையும் விடயங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக மேலதிக சொலிசிட்ட ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி வேறு சிறைக்கைதிகளை விடுதலை செய்துள்ளமை தொடர்பான வழக்கு விசாரணைை நேற்று புதன்கிழமை (11) மீண்டும் இடம்பெற்றபோது, குற்றப்புலனாய்வு  விசாரணை திணைக்களத்துக்கு பதிலாக முறைப்பாட்டை முன்லைப்படுத்தி தெரிவிக்கையிலேயே மேலதிக சொலிசிட்ட ஜெனரால் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், சர்ச்சைக்குறிய சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நபர் தப்பிச்சென்றுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்டுவரும் விசாரணை முடிவடையவில்லை. அத்துடன் இந்த சம்பவம் வெறுமனே திடீரென இடம்பெற்ற சம்பவம் ஒன்று அல்ல. பல வருடங்களாக கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடி செயலாகும். அதனால் இதுதொடர்பான விசாரணைகளை விரைவாக  முடிவுக்கு கொண்டுவர முடியாது.

இலங்கையில் இதுபோன்ற குற்றவாளிகள் மிகவும் நுட்பமானவர்கள் என்றும், உயர் பதவிகளில் உள்ள நபர்கள் வேறு எவரையும் விட நுட்பமானவர்கள் என்பதால் விசாரணை நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு வாரங்கள் தேவையாகும். அதேநேரம் அடுத்த வழங்கு விசாரணை தவணையின்போது  இந்த விசாரணை தொடர்பில் நீதிமன்றம் அதிர்ச்சிக்குள்ளாகும் பல தகவல்களை வெளிப்படுத்துவேன் என்பதை மிகவும் பாெறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

ஜனாதிபதி  சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸ, சந்தேக நபரான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்காக மீண்டும் பிணை கோரியபோது  அதனை நிராகரித்த பிரதான நீதிவான, எதிர்வரும் 25ஆம் திகதிவரை தொடர்ந்தும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை சிறைப்படுத்துமாறு உத்தரவிடடார். வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  அநுராதபுரம் நீதிவான் நலக்க சன்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றுவந்த கைதியொருவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் முறைகேடாக விடுதலை செய்த குற்றச்சாட்டில் மொஹான் கருணாரத்ன கடந்த 8ஆம் திகதி குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்றையதினம் அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே  நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: இடம்பெற்றுள்ளபொதுமன்னிப்பில்முறைகேடு.ஜனாதிபதி
ShareTweetShareShareSendSend
Previous Post

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

Next Post

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us