Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

Stills by Stills
20/05/2025
in இலங்கை
0
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

திங்கட்கிழமை நேற்று(19) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைப் புலிகள், புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

யுத்தக்குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

‘‘பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறிகொடுத்து, சொத்துகளை இழந்து முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து 16 வருடங்கள் நிறைவடைகின்றன. எமது இராணுவ வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். 14,000 வரையான இராணுவத்தினர் அங்கவீனமுற்றுள்ளார்கள். எனவே, இது தமிழ் மக்களுடனான போராட்டம் அல்ல. நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக செயற்பட்ட விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுடனேயே நாங்கள் போராடினோம். அதேபோன்று தேசத்தின் மீது நேயமிக்க மக்கள் இருக்கும்வரை நாட்டைப் பிளவுபடுத்த இடமளிக்க மாட்டார்கள்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்தார்கள். தற்போதுள்ள அரசியலமைப்பில் பிரதானமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒருவிடயம் இந்த நாடு சமயமில்லாத நாடாக வேண்டும். அதேபோன்று இந்த நாடு பெடரல் நாடாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு எமது நாடு பெடரல் நாடாகினால் இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதில் எந்தப் பலனும் இல்லை. இந்த நாடு ஐக்கியமாக இருந்தால் மாத்திரமே இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பு கிடைக்கும்.

ஜெனீவாவில் தற்போது வெளிபொறிமுறை யொன்றை வலியுறுத்தியுள்ளது. 41/6 என்ற யோசனையில் அதனை நிறைவேற்றியுள்ளது. அதில் யுத்தத்துக்கு அரசியல் தலைமைத்துவம் மற்றும் யுத்த தலைமைத்துவத்தை வழங்கியவர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்காக தற்போதும் சாட்சிகள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதனை முன்னாள் அரசாங்கங்கள் நிராகரித்திருந்தாலும் தற்போது அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் ஏன் அவர்கள் அதிக கரிசனை செலுத்துகிறார்களென்றால், யுத்தமொன்றின் வெற்றியையும் தோல்வியையும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்கிறார்கள். எனவே, யுத்தம் செய்வதா இல்லையா என்பதை யும் அரசியல்வாதிகளே தீர்மானிக்கிறார்கள்.

அரசியலின் தொடர்ச்சியே யுத்தமாகும். யுத்தமின்றி அரசியல் செய்யமுடியும். ஆனால், எப்போதும் அரசியல்வாதிகளின்றி யுத்தமொன்றை முன்னெடுக்க முடியாது. பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதைச் செய்திருப்பார்கள் என்றால் யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தேசத்துரோக யுத்தக் குற்றங்கள் மீதான வெளி பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. இதனூடாக, யுத்தக் குற்றம் செய்தோமென்று தமிழ் மக்களைக் கட்டாயமாக அல்லது எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தோம், அவர்களை சித்திரவதை செய்தோம் என்றும் வேண்டுமென்றே சாட்சியளிப்பது போன்றதாகும்.

இலங்கைக்கு எதிரான தேசத்துரோக பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது.  பாராளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு உரையும் ஹன்சாட்டில் வெளியிடப்படும். அவ்வாறு ஹன்சாட்டிலிடப்பட்டதன் பின்னர் நாங்கள் யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச்சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகிவிடும். இதுவே மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகும்.

எனவே, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சபை முதல்வர் எங்கிருந்தாரென்பது தெரியவில்லை. அந்தக் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க இங்கிருந்திருக்காவிட்டால் 22 இலட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களைப் பாதுகாத்துக்கொண்டே இந்த யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

யுத்தகாலத்தில் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை, கொலை செய்யவுமில்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவ்வாறிருக்கையில், பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார். விடுதலைப் புலிகள் தமிழ் புலம்பெயர்வாழ் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இவர் இதற்கு முன்னரும் இலங்கை சிங்கள பெளத்த நாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலைப்பாடுகளைக்கொண்ட பிமல் தற்போது நாட்டைக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கனடாவில், தமிழ் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் செய்து அதற்காக நினைவுத்தூபியையும் அமைக்கிறார்கள். எனவே, பிமல் ரத்நாயக்கவின் இந்தக் கருத்து அதற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதென்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை’’ என சரத் வீரசேகர கூறியுள்ளார்.

யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார்.  விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

Tags: குற்றச்சாட்டுசரத்வீரசேகரபிமல் ரத்நாயக்க -
ShareTweetShareShareSendSend
Previous Post

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

Next Post

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.