ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் நேற்று இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கத்தார் தோஹாவிற்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.விமான அனுமதிக்கான சோதனையின் போது இவரது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையில் குறித்த கடவுச்சீட்டு போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.