திருமதி சுந்தராம்பாள் குணநாயகம்
பிறப்பு – 10.09.1942
இறப்பு -20.08.2023
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் தளபதியுமான புலேந்தி அம்மானின் தாயார் இன்று இயற்கை எய்தினார்.
தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்த தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆணிவேர்களில் ஒருவருமான மூத்த தளபதி புலேந்தி அம்மானை இவ்வுலகுக்கு தந்தவர் அன்னை சுந்தராம்பாள் குணநாயகம்.
பாலையூற்று திருகோணமலையை பிறப்பிடமாகவும் சென்னை தமிழ்நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுந்தராம்பாள் குணநாயகம் ஏழு பிள்ளைகளின் தாயாராவார்.
21.08.2023 அன்று சென்னை ஈச்சம்பாக்கத்தில் அமைந்துள்ள மயானத்தில் கிரியைகள் முடிக்கப்பட்டு மாலை 3.00 க்கு தகனம் செய்யப்படும் என்பதனை குடும்பத்தினர் அறியத்தந்துள்ளனர்.
தொடர்புகளுக்கு.
11G,barathi street,ramaliga nagar,
vettuvankeni,
Chennai-600115
தொடர்புகளுக்கு
+91 91764 14950
ஆனந்தம்.
தமிழீழ தேசியத்தலைவரின் மிகுந்த நம்பிக்கையை பெற்று தாயக விடிவிற்காக களமாடி வீரச்சாவினை தழுவிக்கொண்ட புலேந்தி அம்மானை இவ்வுலகுக்கு தந்திட்ட தாயாருக்கு இறுதி வணக்கங்கள்.