Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

அரவிந்த் by அரவிந்த்
09/05/2025
in இந்தியா, ஈழம்
0
0
SHARES
43
VIEWS
ShareTweetShareShareShareShare

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!.

_ வ. கௌதமன்

2009 மே 18 ந்தேதி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, மனித குலத்தை நேசிக்கும் மனிதர்களாலும் மறக்க முடியாத கருப்பு நாள்.

எங்கள் தாய்மொழி தமிழைப் பேசிய எங்களின் தமிழீழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், ரசாயன குண்டுகளையும் வீசி பெண்கள், பிஞ்சுக் குழந்தைகள் என்று கூட பார்க்காமல், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இனப்படுகொலை செய்து முடித்த அந்த நாளை, கண்ணீரும் செந்நீருமாக உலகத் தமிழினம் உள்வாங்கி, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அன்றைய தேதியில் திரு. விஷால் அவர்கள் அடங்கிய நட்சத்திர இசைத் திருவிழாவை, அதுவும் தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்க் கலைஞர்களை இணைத்துக் கொண்டு ஒரு கொண்டாட்ட நிகழ்வாக நடத்துவது என்பது நேர்மையற்றது மட்டுமல்ல, அறமற்ற செயலும் கூட என்பதனை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மரியாதைக்குரிய திரைப்படக் கலைஞர்களும்
உணர்வு பெருக்கோடு புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களைப் போன்றோரெல்லாம் கல்லூரி மாணவர்களோடு இணைந்து எண்ணற்ற போராட்டங்கள் செய்தும், வழக்குகள் சுமந்தும், ஐநா சபைக்கே பலமுறை சென்று போராடியும், வாதாடியும் யுத்தம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் கூட அந்த திட்டமிட்ட இன அழிப்புக்கு நீதி கிடைக்காத நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களை அதே நாளில் நிகழ்த்தி, அதற்கான அறமான தாக்கங்களை சீர்குலைத்து விடக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

காவேரி பிரச்சனை என்றாலும், தமிழீழ உரிமை உள்ளிட்ட எத்தனையோ தமிழர் உரிமை மீட்புப் போராட்டங்களில் தமிழ்த் திரையுலகம் தங்களது மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறது என்பதனை உலகத் தமிழினம் ஒருபோதும் மறந்து விடாது.

ஆகையினால் மே 18 ந்தேதியினை தவிர்த்து, இதே நிகழ்வினை வேறொரு தேதியினில் நடத்தி தமிழின அழிப்பில் உயிர் ஈகம் செய்த தமிழர்களுக்கு தார்மீக மரியாதை செலுத்துமாறு, இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வ. கௌதமன்
பொதுச்செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
09.05.2025

ShareTweetShareShareSendSend
Previous Post

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

Next Post

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more
Next Post
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us