Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

1976 புயல் போன்றதே மிக்ஜாம் புயல் .!

Stills by Stills
14/12/2023
in இந்தியா
0
1976 புயல் போன்றதே மிக்ஜாம் புயல் .!
0
SHARES
9
VIEWS
ShareTweetShareShareShareShare

 .

மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று தமிழக அரசு கூறியது. இந்திய வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்டிருந்த தரவுகளின் படி, ஒரு நாளில் பெய்த மழை அளவு 2023-ஐ விட 2015-ஆம் ஆண்டே அதிகமாக இருப்பதாக கூறுகிறது.2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன

இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் அனைத்தும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் மழை எவ்வளவு பெய்துள்ளது என்பதைக் கணக்கிடுகிறது. அதன் படி, 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழை பதிவாகியது அதே முறையில் கணக்கிடும் போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில் சென்னையில் 23 செ.மீ மழை பதிவாகியது.

பெரு மழை பெய்த நாட்களுக்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் எவ்வளவு மழை பெய்தன என்ற தரவுகள் உள்ளன. 2015-ஆம் ஆண்டில், டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

அதே போன்று 2023-ஆம் ஆண்டில் டிசம்பர் 3-ஆம் தேதி 6.2 செ.மீ மழையும், டிசம்பர் 5ம் தேதி 23.8 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் மொத்தம் 53.1 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.புயல், மழை வெள்ளம் ஆகியவற்றை பற்றி ஒப்பிட்டு பேசும்போது, மழை அளவு தரவுகளை தவிர மற்றும் வேறு சில அம்சங்களும் உள்ளன.

“கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால். 2015-இல் புயல் ஏதும் உருவாகவில்லை. கிழக்கிலிருந்து காற்றாழுத்த தாழ்வு நிலை உருவானது. 2023-இல் மழை தொடங்கிய டிசம்பர் 3-ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த அளவுக்கான தீவிர மழை 2015-ல் பெய்யவில்லை,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ்  கூறும்போது ஒவ்வொரு புயலும் தனித்துவமானது, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாது என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியரும் நீர் குறித்த விரிவான பல ஆய்வுகளை நடத்தி வரும் எஸ். ஜனகராஜ். 2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல்படுகையில் தான் அதிக மழை பெய்தது. அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. சென்னையின் தென் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தான். அதற்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டது ஆகும்,” என்றார்.

2015-ஆம் ஆண்டில் 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. ஏரி உடைந்துவிடும் ஆபத்து இருந்ததால் ஒரே நேரத்தில் 29,400 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் திடீரென 29,000 கன அடி திறக்கப்பட்டது, நிலைமையை மோசமாக்கியது. அடையாற்றின் கரை ஓரங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் புயலினால் பெய்த மழை காராணமாகவே ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் மிக நீண்ட நேரம் நிலை கொண்டு இருந்ததன் காரணமாக அதி கனமழை தொடர்ந்து பெய்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் சென்னைக்கு மிக நெருக்கமாக வெறும் 90 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. மணிக்கு 10 – 18 கி.மீ. வேகத்தில் செல்லும் புயல் வெறும் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது அதன் வேகம் மேலும் குறைந்து மணிக்கு 5 கி.மீ. என்று இருந்தபோது புயல் கிட்டத்தட்ட சென்னைக்கு அருகிலேயே ஸ்தம்பித்து நிற்பது போல் ஆனது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ், “மிக்ஜாம் புயல் 16 முதல் 18 மணி நேரங்கள் சென்னைக்கு அருகிலான கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது. புயலின் மைய பகுதி, சென்னையிலிருந்து 80-90 கி.மீ அருகில் இருந்தது. ஆனால், புயலின் வெளிப்புற பகுதியில் தான் தீவிர காற்றும் மேகங்களும் இருக்கும். அந்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்தது. அதனால் தான் மழை தீவிரமாக பெய்தது,” என்றார்.

மிக்ஜாம் புயல் எப்போது உருவாகும், புயலின் பாதை என்னவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கூறியிருந்தாலும், புயல் இவ்வளவு நேரம் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்க்காதது.மிக்ஜாம் புயல் சென்னை கரைக்கு மிக அருகில் வந்து, சென்னையை உரசி உரசி சென்று மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தது.1976-ஆம் ஆண்டு உருவான புயலின் பாதையும் இதுவாகவே இருந்தது என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ்.

“சென்னையில் அதிக அளவிலான வெள்ளத்தை முதல் முறையாக ஏற்படுத்தியது அந்த புயல். மிக்ஜாம் புயல் கடந்து சென்ற அதே பாதையில் சென்றது, ஆனால் மிக்ஜாம் போல வடக்கு நோக்கி செல்லவில்லை. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 மணி நேரத்தில் 45 செ.மீ மழை பதிவானது. இப்போதும், இதுவே 24 மணி நேரங்களில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழையாகும்,” என்றார்.மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியர் எஸ். ஜனகராஜ், “1976-க்கு பிறகு, சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். எனவே 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை இது என கூறலாம். ஆனால், மழையின் தாக்கம் 1976-ஐ விட இப்போது தான் அதிகமாக உள்ளது. இப்போது, நீர் வழிப்பாதைகள், ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பூமியின் உள் செல்வதற்கான நிலம் குறைந்துக் கொண்டே வருகிறது. பெய்யும் மழையில் 95% ஆறுகளில், கடல்களில் கலக்கிறது,” என்றார். 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றனர்.

Tags: 1976புயல்போன்றதேமிக்ஜாம்புயல்
ShareTweetShareShareSendSend
Previous Post

ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை  தீர்விற்கும் ஆதரவு – அமெரிக்க காங்கிரஸ் டொன்டேவிஸ்.

Next Post

மட்டக்களப்பு சாதனைப்பெண் விதுர்ஷா: தடைகளை தகர்த்து வெற்றி

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post
மட்டக்களப்பு சாதனைப்பெண் விதுர்ஷா: தடைகளை தகர்த்து வெற்றி

மட்டக்களப்பு சாதனைப்பெண் விதுர்ஷா: தடைகளை தகர்த்து வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.