ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1988 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவன (திருத்தச்) சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது.
இராணுவ சேவையின் தேவைகளுக்கமைய, மருத்துவ தொழில்வாண்மையாளர்களாக மாணவர் படையணி அலுவலர்கள் பயிற்றுவிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டப்படிப்பை வழங்கப்படுவதற்காக 2011ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் மருத்துவ பீடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞானப் பட்டப் படிப்புக்காக கட்டண முறையில் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய தற்போது உள்நாட்டு மாணவர்கள் முப்படைக்கு அல்லது பொலிசுக்கு கெடட் அலுவலராக இணைந்து கொள்வதன் மூலமும், தகைமைபெற்ற வெளிநாட்டு மாணவர்களும் கட்டண முறையில் மாத்திரம் இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாய்ப்புகளை மேலும் விரிவாக்கம் செய்து 2024 கற்கை ஆண்டு தொடக்கம் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள உள்நாட்டு விண்ணப்பதரிகளுக்கும் கட்டண அடிப்படையில் மருத்துவ பட்டப்படிப்பில் இணைத்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைப்புச் செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கடைப்பிடிக்கப்படுகின்ற வெட்டுப்புள்ளித் திட்டத்திற்கு மேலதிகமாக, தகைமைகள் சிலவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அளவுகோல்களைப் பின்பற்றி, கட்டண முறையில் மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டப்படிப்பை கற்பதற்கு ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பட்டப்படிப்புக்காக மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.