இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடத்தை இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கடவுள்ளதாகவும், அடுத்த அமைச்சரவையின் போது அதற்கு அனுமதி கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.