Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இலங்கை

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

Stills by Stills
24/07/2023
in இலங்கை
0
150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …
788
SHARES
5.1k
VIEWS
ShareTweetShareShareShareShare

 

என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து  கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூறும் முகமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இவ்வினப்படுகொலையின் நீடித்த தாக்கத்தை பிரதிபலிக்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

1983ம் ஆண்டு ஜூலை 23 இலிருந்து, ஜூலை 30 வரை அரச ஆதரவுடனான சிங்களக் காடையர்கள்  18,000 தமிழர் வீடுகளை அழித்ததுடன் 3,000 தமிழர்களை உயிரோடு எரித்தும் வெட்டியும் சுட்டும் கொலை செய்து ரசித்தனர்.  5,000 தமிழ் வணிக வளாகங்களை  எரித்து நாசமாக்கியது . சிங்கள பௌத்தகாடையர்கள் , பல தமிழ் பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரத்திற்குள் 90,000இலிருந்து 150,000 தமிழர்கள் உடுத்த உடையுடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

நான்கு தசாப்தங்களுக்குப் பின்பும் கறுப்பு ஜூலைக்கான தண்டனை வழங்கப்படாத நிலையே தொடர்கிறது. எந்தவொரு தனிநபரோ, அல்லது இலங்கை அரசோ கறுப்பு ஜூலையின் போது நடந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. இவ்வாறான பொறுப்புக்கூறாத்தன்மையே, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உட்பட மேலும் பல மனித உரிமை மீறல் குற்றங்களை செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு தைரியத்தை வழங்கியது. இதில் கணக்கில் வராத பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட, அல்லது கொல்லப்பட்ட 70,000 இலிருந்து 169,796 தமிழர்கள் உள்ளனர்.

இன்றைய தலைமுறையினருக்கு நினைவு படுத்த மறந்து போன கறுப்பு ஜூலை நிகழ்வானது ,   வெறுமனே வன்முறைச் செயல்கள் மட்டும் அல்ல; அவை அனைத்து அரச கட்டமைப்புகளிலும் வேரூன்றிப்போய்விட்ட, கட்டுப்பாடற்ற சிங்கள-பௌத்த தேசியவாத எண்ணத்தால் வளர்க்கப்பட்ட கட்டமைக்கப்பட்டதும், உள்நோக்கமுடையவையுமாகும். கலவரம் நடந்த காலப்பகுதியில், அரசாங்கம், சிங்களக் கும்பல்களுக்கு வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தமிழர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை வழங்கியதுடன், சிங்களக் கும்பல்களை அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களில் கொழும்பைச் சுற்றிக் கொண்டு சென்றது. வன்முறை தொடங்கி மூன்று நாட்களில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டதாவது: “அங்கு (வடக்கில்) அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ இவர்கள் (சிங்களவர்கள்) இங்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள்… உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.” கறுப்பு ஜூலையானது 26 வருட கால ஆயுதப் போரின் அவலத்தை முன்கணித்தது மட்டுமன்றி, அதிகளவான தமிழர்களை அவர்கள் தாயகத்திலிருந்து வெளியேறவும் தூண்டியது. கறுப்பு ஜூலையின் வடுக்கள் மற்றும் அதன் பாரிய அளவிலான தாக்கங்கள் தமிழ் சமூகத்தினூடேயும் அதன் கூட்டு நினைவுகளூடேயும் தொடர்ந்து எதிரொலிக்கின்றது.

கடந்த கால அட்டூழியங்களை நிவர்த்தி செய்து, சமூகங்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர இவ்வாண்டு, அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை முன்மொழிந்தது. கறுப்பு ஜூலை பிரச்சினை நடந்ததிலிருந்து, இதேபோன்ற பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பயனற்றுப்போனத்துடன், பரிகாரம் அல்லது பொறுப்புக்கூறலை வழங்கவில்லை. சுதந்திரமற்ற, பக்கச்சார்புமிக்க, மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்கத் தவறிய இது போன்ற கடந்த கால தோல்வியடைந்த ஆணைக்குழுக்களைக் கருத்திற்கொண்டு, சமீபத்தில் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவை தமிழ் மக்கள் மிகச்சரியாக நிராகரித்துவிட்டனர். இவ்வாறன ஆணைக்குழுக்கள் அரசுக்கு ஆதவரான நிலைப்பட்டினையே எடுக்கும் என்பது உலகறிந்த உண்மை. இவ்வாறன உள்ளூர் ஆணைக்குழுக்கள்,   40 வருட கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் அரசின் சதிகளை மீறி தீர்வினை பெற்று தரப்போவதில்லை.

உண்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத, நல்லிணக்கத்திற்கான வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசாங்கத்தை தமிழர்கள் நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. சர்வதேச சமூகம் தமிழர் இனப்படுகொலையை அடையாளப்படுத்தக் கோரும் சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஆதரித்து, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரிப்பதில் பாதிக்கப்பட்ட-உயிர் பிழைத்த சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதோடு, பாரபட்சமற்ற விசாரணைகள் மற்றும் வழக்குகளை உறுதி செய்யக்கூடிய சுதந்திரமான சர்வதேச பொறிமுறைக்கான அவர்களின் கோரிக்கையையையும் ஆதரிக்க வேண்டும். இந்தத் துயர் மற்றும் இழப்புடன்கூடிய வரலாற்றின் மத்தியில், நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் சுய உறுதிப்பாட்டில் அசைக்க முடியாத முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சக தமிழர்களுடன் பல சமூக நீதி அமைப்புக்கள் போராடுகின்றன. நீதி கிடைக்க வாய்ப்பற்ற மக்களுக்காகவும் இதனை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து அயல் நாடுகளுக்கும் இதனை அடிக்கடி வலியுறுத்த வேண்டியது அவசியமாகின்றது.

 

Tags: 40ஆம் ஆண்டுஇலங்கைசிங்களவர்கள்கொலைஅழிப்புதமிழர்கள்ஜூலை 23
ShareTweetShareShareSendSend
Previous Post

முருங்கையின் அபூர்வ மருத்துவ குணங்கள்: வீட்டுக்கு ஒரு முருங்கை இருந்தால் போதும் ..

Next Post

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்…

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
எலான் மஸ்க் அதிரடியாக  ட்விட்டர் லோகோவை  மாற்றினார்…

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.