Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

Stills by Stills
05/01/2024
in இந்தியா
0
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …
0
SHARES
50
VIEWS
ShareTweetShareShareShareShare

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பஸ் நிலையம் அருகே வைத்து நேற்று (4) இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றநபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தலைமன்னாரில் இருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வந்து நின்ற நாட்டு படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பார்சலை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.

கடத்தல் தங்க கட்டிகளை பெற்று கொண்ட நபர் இருசக்கர வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடம் தர்கா அருகே சென்று கொண்டிருக்கும் போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற ஆட்டோவில் மோதி விட்டு தப்பிக் முயன்றுள்ளார். இதனை கண்ட அதிகாரிகள் அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது அதிகாரியை தள்ளிவிட்டு விட்டு இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் தங்க கட்டிகள் இருந்தது. தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 4.50 கோடி ரூபாய் என்றும்,கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Tags: இந்தியாஇலங்கைகடத்தல்தங்கம்
ShareTweetShareShareSendSend
Previous Post

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் : குறள் எண் 810

Next Post

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more
Next Post
விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

23/07/2026
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us