சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியர் நேற்று (23) நோர்வூட் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.இலங்கையில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் முன்னர் பெரிதாக இடம்பெறுவதில்லை. அண்டை நாடான இந்தியாவில் நடைபெறுவது போன்று மிக மோசமான நிலையில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் 8 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர் கற்பிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று (24) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் கடந்த காலத்தில் இவ்வாறான குற்ற செயளில் ஈடுபட்டு வந்தவர் என தெரிய வந்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.