Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!

Stills by Stills
02/12/2023
in மாவீரர்
0
சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!
0
SHARES
93
VIEWS
ShareTweetShareShareShareShare
தமிழ் ஈழ மக்கள் “சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது, எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது” என்பதை ஒரு பெரும் வலிமைச்செய்தியாக உணர்த்தியுள்ளார்கள். தேசிய தலைவர் பிரபாகரன் கனவை நிஜமக்குகின்றனர்.ஆயுதங்களற்ற ஈழத்திலும் அடக்குமுறை வழியாகவும் ஒடுக்குமுறை வழியாகவும் இலங்கை அரசு போரைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும் ஈழ தேசம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.விடுதலைப் புலிகள் என்ற பேரியக்கம் இல்லை, அதன் காவல் இல்லை, படையணிகள் இல்லை, தளபதிகள் இல்லை,தலைவர் இல்லை,வீதிகள் முழுக்க இராணுவம் சூழ்ந்துள்ளது.ஆனாலும் தமிழீழம் அமைவது உறுதிஎன்பதை மாவீரர் நாள் உணர்த்தியுள்ள பெரும் வெற்றிச்செய்தியாகும்.
ஈழ நிலமெங்கும் இராணுவ ஆட்சி நிலையிலும் கூட பல்வேறு அச்சுறுத்தல்களையும் கடந்து மாவீரர் நாளை அனுஷ்டித்ததன் வாயிலாக,விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்த பிறகும்கூட, அவர்களுடனான போரை சிறிலங்கா அரசும் அதன் படைகளும் இன்னமும் நிறுத்தவில்லை என்பதையும்கூட இந்த மாவீரர் நாள் உணர்த்தியுள்ளது.
 விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு நாங்கள் தடுக்கவில்லை என்றும் போரில் இறந்த எவரையும் நினைவுகூரலாம் என்றும் கொழும்பில் ஊடகங்களுக்கு அரச பிரதிநிதி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் நடைமுறையில் மாவீரர் நாளைக் கண்டு பல அச்சங்களை வெளிப்படுத்திய அரசு பல அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியிருந்தது.
முள்ளியவளை துயிலும் இல்லத்தில் காவல்துறையினர் பல இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். மாவீரர் நாள் கொடிகளை சேதப்படுத்தினார்கள். காந்தள் மலர்களை வைக்கக்கூடாது என்று மிரட்டினார்கள். அவ்வளவு அச்சுறுத்தல்களையும் தாண்டியே அங்கு மாவீரர் நாள் இடம்பெற்றது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பல இடையூறுகளை அரசின் காவல்துறை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மாவீரர் நாளை தடுக்க பல முயற்சிகள் இடம்பெற்றன. அதனைத் தாண்டி மக்கள் அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்துள் ளார்கள். கிழக்கில் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்று மாவீரர் நாளை தடுக்கவும் சிறிலங்கா காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்ட போதும் தமிழர்கள் தரப்பால் அவை முறியடிக்கப்பட்டன. நவம்பர் 27 அன்று ஒட்டுமொத்த தமிழ் ஈழதேசமும் விளக்குகளால் ஒளிர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்கக்கூடாது என்ற நியதிக்கு அமைவாக மாவீரர் நாளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டிய அரசு அநீதியாக நடந்துகொண்டதையும் இந்த மாவீரர்நாள் உணர்த்தியுள்ளது.
இலங்கைத் தீவில், எங்கெல்லாம் தமிழர்கள் அடக்கி ஒடுக்கிப் படுகொலை செய்யப்படுகிறார்களோ அதையெல்லாம் அடையாளப்படுத்தி வரைபடத்தை வரைந்தால் அது தமிழீழமாகும் என்ற கருத்துப்பட தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறியதைப் போலவே, நவம்பர் 27 எங்கெல்லாம் மாவீரர்களுக்கு விளக்குகள் ஏற்றப்பட்டு நிலம் ஒளிர்ந்ததோ அதுவே தமிழீழம் என்பதும் மாவீரர் நாள் உணர்த்தியுள்ள பெரும் செய்தியாகும்.
Tags: அம்பலம்.அரசின்இரட்டைஇலங்கைவேடம்
ShareTweetShareShareSendSend
Previous Post

தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் மன்னாரைச்சேர்ந்த 7 பேர் !

Next Post

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தமிழீழ தேசிய மாவீர் நாள்!

தமிழீழ தேசிய மாவீர் நாள்!
by Stills
02/01/2026
0

  ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் 21ம் திகதி ஆரம்பமாகி இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர்...

Read more

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

by Stills
28/11/2024
0

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

Read more

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்
by Stills
12/12/2024
0

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

Read more

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..
by Stills
29/06/2024
0

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின்...

Read more

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 
by தரணி
16/05/2024
0

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... அப்பா ! 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024). காவியத் தலைவன் ஓவியம் ஒன்று வரைந்தாராம் அதற்கு வர்ணங்கள் தீட்டி சொர்ணம்...

Read more

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம் மதிப்பளித்தது .

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம்  மதிப்பளித்தது .
by Stills
12/02/2024
0

தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....

Read more
Next Post
நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு புத்தசாசன தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us