Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

Stills by Stills
14/08/2023
in இந்தியா
0
ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!
0
SHARES
3
VIEWS
ShareTweetShareShareShareShare

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங்கால் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துக் கொண்ட மாணவர், முந்தைய நாள் காலை தனது தாயுடன் பேசுகையில், விடுதியில் ராகிங் கொடுமை அதிகமாக உள்ளதாகவும், ஆதலால் தன்னை வீட்டிற்கு அழைத்துச்செல்லும்படியும் கேட்டுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மறுநாள் மாணவர் உயிரிழந்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில், நாடியாவின் ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்தவர் சவப்னோதீப் என்ற மாணவர். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களில் சிலர் சவப்னோதீபை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மனதளவில் பாதிப்படைந்த மாணவர் சவப்னோதீப், இது குறித்து உடன் படித்த மாணவர்களிடம் சொல்லியதுடன், ” சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை எப்போது நிறுத்துவார்கள்?” என்றும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்று இரவே 11.15 மணியளவில்தங்கியிருந்த மாணவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்துகீழேகுதித்து
தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அதீத காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்
பட்டார்.  சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இறந்திருக்கிறார்.முதல்கட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் மாணவனின் தலை, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது. தவிர, உடலில் ஏற்பட்டுள்ள பிற காயங்களால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர்களை போலீசார் விசாரணை செய்ததில்“சில நாட்களாக ராகிங் தொந்தரவால் சவப்னோதீப் இரவு சரியாக தூங்கமுடியவில்லை என்று எங்களிடம் தெரிவித்திருந்தார்,சவப்னோதீபின் இத்தகைய மன உளைச்சலை கல்லூரி முதல்வர் ரஜத் ரேய்க்கு நாங்கள் தெரிவித்தோம். அவர் மறுநாள் நடவடிக்கை எடுப்பார் என நினைத்திருந்தோம். ஆனால் அன்று இரவே சீனியர் மாணவர்கள் சிலர் சவப்னோதீபை மொட்டைமாடியில் ஆடை . கள் இன்றி ஓடவிட்டு ராகிங் செய்தனர்.

இது குறித்து உடனடியாக முதல்வரிடம் சொல்வதற்காக நாங்கள் மீண்டும் அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் எங்களின் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை, அதற்குள் மாணவர் தற்கொலைக்கு முயற்சித்து விட்டார்” என்று மாணவர்கள் சிலர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சவப்னோதீப் தற்கொலை விவகாரத்தில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் சௌரப் சௌத்ரி சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர், இருப்பினும் சவப்னோதீப் தங்கியிருந்த அதே விடுதியில் அதிகாரபூர்வமற்ற நபராக தங்கியிருந்து விடுதியின் மெஸ் குழுவின் பொறுப்பை கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சவப்னோதீபின் தந்தை போலீசாரிடம் கூறுகையில்,” எனது மகனுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. என்னசெய்வதென்று தெரியாத நிலையில், சௌரப் சௌத்ரி என்னிடம், ‘சவப்னோதீபிற்கு விடுதியில் இடம் பெற்றுத்தர என்னால் இயலும், நான் மெஸ் கமிட்டியின் தலைவர். சவப்னோதீபிற்கு இடம் வேண்டுமென்றால் அதற்கு 1000 ரூபாய் செலவாகும்’ என்று என்னிடம் கூறியதால், நான் சௌரப்க்கு 1000 ரூபாய் கொடுத்தேன். அவரும் அவரது அதிகாரத்தால் சவப்னோதீபை விடுதியில் தங்கவைத்தார்” என்று கூறியுள்ளார்.

பல்கலைக்கழக முதல்வர் ரஜத்ரே இதுகுறித்து பத்திரி்கையாளருடன் பேசியபோது, “சௌரப் சௌத்ரி மெஸ் கமிட்டியின் தலைவர் இல்லை, அவர் சவப்னோதீபின் தந்தையிடம் பணம் பெற்றிருந்தால் அது சட்டவிரோதமானது. சவப்னோதீபின் நண்பர்கள் என்னிடம் புகார் கூறியதும் நான் உடனடியாக ராகிங் செய்யும் மாணவர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன், அதற்குள் இந்த விபத்து நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  1. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050  தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் தற்கொலை எதற்கும் தீர்வல்ல.!
Tags: சவப்னோதீப்சீனியர் மாணவர்களின் ராகிங்தற்கொலை
ShareTweetShareShareSendSend
Previous Post

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

Next Post

ஆப்பிரிக்காநாட்டு இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more
Next Post
ஆப்பிரிக்காநாட்டு  இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

ஆப்பிரிக்காநாட்டு இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

23/07/2026
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us