அமெரிக்க மற்றும் சீனத் தலைவர்கள் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற நிலையைக் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளனர்.சான் பிரான்ஸிஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் சந்தித்தனர். சுமார் ஓராண்டுக்குப் பின்னர் இருவரும் முதல்முறையாக நேரில் சந்தித்துள்ளனர்.
இருதரப்புக்கும் இடையிலான விரிசல், மோதலாக மாறிவிடக்கூடாது என்று பைடன் கூறினார். அமெரிக்க–சீன இரு தரப்பு உறவு உலகிலேயே மிக முக்கியமானது என ஷி வர்ணித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முடியாது என்றார் .தாய்வான், வர்த்தகம், மத்திய கிழக்கு, உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.பல மாத இராஜதந்திர முயற்சிக்குப் பின் இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்