உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986, 2003ல் நாசா விண்வெளி அராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேரும்,1971ம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய 11 விண்வெளி வீரர்களில் 3 பேரும், 1967 ல் அப்பல்லோ1 ஏவுதளத்தில் 3 பேரும் இறந்துள்ளனர்.
இந்தியா நிலவின் தென் துருவப்பகுதியில் சந்திரயான் விண்கலத்தை தரையிறக்கி வெற்றிகரமாக தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அடுத்த நகர்வாக சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது இவ்வாறு இருக்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டலத்தில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கி, அதில் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது என்ன ஆராய்ச்சி? இதனால் என்ன சாத்தியம் என்பதை பற்றி விரிவாக காணலாம்.
விண்வெளியில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனானது 4 வால்வோ பஸ்ஸை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு பெரிய இடமாக இருக்குமோ அத்தனை பெரிய இடத்தை இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனானது கொண்டிருக்கும். இதில் மூன்று அறிவியல் ஆய்வாளர்கள் தங்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே தனது ஆராய்ச்சியை மேற்கொண்டபடி இருக்கும். ஆனால், அவ்விடத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது. இதற்காக தான் அங்கு பலவித ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.
குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி இயங்குகிறான்? இதனால் அவனுக்கு உண்டாகும் உடல் உபாதைகள் என்னென்ன? விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் மனிதன் எப்படி இயக்கபடவேண்டும்? என்பதைத் தவிர பல வித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், (உதாரணத்திற்கு தண்ணீரும், எண்ணெய்யும்) பூமியில் இரு உலோகத்தை கலந்தால், அதில் எடை அதிகமாக இருப்பது கீழாகவும் எடை குறைவாக இருப்பது மேலாகவும் இயங்கும் தன்மையை பெற்று இருக்கும். ஆனால் புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில், உலோகத்தின் எடையானது சரியான விகிதத்தில் இருக்கும். ஆகவே முக்கியமான வெவ்வேறு எடைக்கொண்ட தனிமங்கள், புரோட்டன்ஸ் இவற்றை கொண்டு ஆராய்ச்சி செய்வதற்காக ’ஸ்பேஸ் ஸ்டேஷன்’ செயல்பட்டு வருகிறது.