Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

மதுரை ரயில் தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?

Stills by Stills
26/08/2023
in இந்தியா
0
மதுரை ரயில்  தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி 63 பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக தனி ரயில்பெட்டியை பதிவு செய்து புறப்பட்டுள்ளனர். இந்த ரயில் பெட்டியானது உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஆந்திரா கர்நாடக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளாக இணைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதனையடுத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற 63 பயணிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் பத்மநாப சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரைக்கு புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக இணைப்பு பெட்டியாக வந்தடைந்த நிலையில் மதுரை ரயில்வே நிலையம் அருகே உள்ள போடிலைன் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 63 பேரும் பயணித்த ரயில் பெட்டியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது அந்த ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டி முழுவதுமாக தீப்பற்றியுள்ளது.சமைத்துகொண்டிருந்த நபர் தீ விபத்து ஏற்பட்டவுடன் தப்பியோடிவிட்டார் இதனையடுத்து பெட்டி முழுவதிலும் தீ மளமளவென பரவ தொடங்கிய நிலையில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியில் தப்பியோடியுள்ளனர். பெட்டியில் ஒரு சில பயணிகள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் வெளியே வர முடியாத நிலையில் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 8பேர் படுகாயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை ரயில் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் இருந்து வெடித்து சிதறிய சிலிண்டர் பெட்டியில் ஜன்னல் ஒன்றின் அருகே சிதறிய நிலையிலும் மற்றும் 5க்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய் அடுப்புகள், கட்டு கட்டாக விறகுகள், நிலக்கரி மூட்டை, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டின்கள், பாத்திரங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

 சம்பவ இடத்தில் ரயில்வே துறை பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை ரயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பாளர், துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

 பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.கே.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிலிண்டர்கள் சட்டவிரோதமாக ரயில் பெட்டியில் கொண்டுவரப்பட்டு அவர்கள் சமைத்து வந்தது தெரியவந்தது. ரயில் பெட்டியில் தீ பற்றியவுடன் பெட்டியில் சமைத்துகொண்டிருந்த நபர் தீ விபத்து ஏற்பட்டவுடன் தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ரயில் தீ விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு தென்னக ரயில்வே சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் தலா 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது காலை 5.15 மணிக்கு தீ விபத்து நடைபெற்ற நிலையில் எட்டு மணி வரைக்கும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூலமாக தீயை அணைக்கும் பணிகளானது நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் 9:00 மணி அளவில் ரயில் பெட்டியில் புகை வரத் தொடங்கியது. அளவுக்கு மீறி எழுந்த புகையை தீயணைப்புத் துறையினர் அதிகளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தடையை மீறி கொண்டு வந்த கேஸ் சிலிண்டரால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தான விசாரணையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் பயணித்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே நிலையத்தில் இதுபோன்று எளிதில் பற்றக்கூடிய பொருட்களை எப்படி ரயில் பெட்டிக்குள் வைத்திருக்க அனுமதித்தார்கள் என்ற சந்தேகமும் பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது. மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் உறவினர்களால் அடையாளம் காண முடியவில்லை.

உயிரிழந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், உடைகளை வைத்து அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் பட்டியல்

1) பரமேஸ்வரர் தயாள் குப்தா (வயது 55)

2) மிதிலேஷ் குமாரி (வயது 62)

3) சந்திர மன்சிங் (வயது 65)

4) நிதீஷ்குமாரி (வயது 62)

5) சாந்தி தேவி வர்மா (வயது 65) என்பதும் தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Tags: 8பேர் படுகாயம்9 பேர் சடலமாக மீட்புதீ விபத்திற்கு யார் காரணம்மதுரைரயில் பெட்டி
ShareTweetShareShareSendSend
Previous Post

கிளாலி கடலிலே காவியமான கடற்கரும்புலிகள் : மேஜர் நிலவன் – கப்டன் மதன் வீர நினைவுகள்…

Next Post

MLA மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிந்த மருமகள்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post

MLA மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிந்த மருமகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.