விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக தற்போது இருப்பவர் மோனிஷா. அவர் டிவி தொகுப்பாளராக இருந்து நடிகையாக வந்திருக்கிறார்.
குக் வித் கோமாளியில் வாரம்தோறும் அவர் போடும் கெட்டப் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக அவர் கோவை சரளா கெட்டப்பில் ‘சினேகிதனே’ என அவர் பேசுனம் வசனம் அதிகம் பேமஸ்.
தியேட்டரில் கண்ணீர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாவீரன் படத்தில் மோனிஷாவும் நடித்து இருக்கிறார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மோனிஷா தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறார்.
அவர் படம் பார்த்து முடித்துவிட்டு தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.