Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி.- அண்ணாமலை

Stills by Stills
21/07/2023
in இந்தியா, இலங்கை
0
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி.- அண்ணாமலை
0
SHARES
32
VIEWS
ShareTweetShareShareShareShare
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் உள்ள கலாசார பாரம்பரியத்தை புதுப்பித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார். இலங்கை தமிழ் மக்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், பல்வேறு திட்டங்களையும் நிதி உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான நமது மத்திய அரசு, தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகள் குறித்து இந்த சந்திப்பில் முடிவாகின.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இலங்கை தமிழர்கள் பகுதியில் சுற்றுலா, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஈழத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத்தொடர்பு, 1960-களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்த இலங்கை காங்கேசம் துறைமுகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.287 கோடியில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தை தொடங்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத்தமிழர்களுடனான கலாச்சார தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில், சீரமைப்பு மற்றும் நல்லிணக்க பணிகளை இலங்கை அரசு நிறைவேற்றவும், இலங்கை தமிழர்களின் அதிகார பகிர்வை உறுதி செய்யும் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் மாகாணசபை தேர்தலை நடத்துதல் என்ற தனது உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும் என்றும், இலங்கை தமிழ் மக்கள் மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்தியா-இலங்கை உறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிலிருந்து தமிழர்கள், இலங்கையில் குடியேறி, 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த கலாசார உறவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சார பாரம்பரியத்தை மீட்டு புதுப்பித்திருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

33 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் எதுவுமற்ற தீர்வு என நிராகரிக்கப்பட்ட  13 வது திருத்த சட்டத்தை வலியுறுத்துவதையே ஒரு சாதனையாக பேசுகின்ற பாஜக வை பார்த்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: 13 வது திருத்த சட்டம்33 வருடங்கள்அண்ணாமலைதமிழகம்-இலங்கைதீர்வுத்திட்டம்பாஜகமோடிரணில்
ShareTweetShareShareSendSend
Previous Post

இலங்கை ஜனாதிபதி ரணிலின் இந்தியப் பயணம்: தமிழ் மக்கள் எதிர்பார்க்க எதுவுமில்லை…

Next Post

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more
Next Post
உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us