சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை இந்திய அணி வீழ்த்தியது.
7வது ஆசிய ஹாக்கி தொடர் போட்டிகள் சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஹாக்கி விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா அணிகள் மோதின. இப்போட்டியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதன்மூலம் ஆசிய ஹாக்கி தொடரில் 4 முறை சாம்பியன் பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளத ஒவ்வொருஅணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் மலேசியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின., ஜப்பான் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதுபோல் மலேசிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா மற்றும் சீனா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று இரவு தொடங்கியது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 6 கோல்களை பதிவு செய்தது. சீனா இரு கோல்கள் அடித்தது. இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் அடித்த இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.