Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

Stills by Stills
17/08/2023
in இலங்கை, இந்தியா, உலகம்
0
“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு  போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல்  அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும்  என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து தனது நாடு உணர்வுபூர்வமாக செயற்படும்  என இலங்கை  ஜனாதிபதி  இந்திய பிரதமருக்கு உறுதிவழங்கி ஒரு மாதத்திற்குள் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நிற்கப்போகின்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபரின் பிற்பகுதி முதல் நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் அம்பாந்தோட்டை கொழும்பு துறைமுகங்களில் தங்கிநிற்க்கும்-இதுவரை இலங்கை அரசாங்கம் அந்த கப்பலிற்கு அனுமதிவழங்கவில்லை.

ஏற்கனவே சீன இராணுவத்தின் ஹய் யங் 24 ஹாவே கப்பல் 138 பணியாளர்கள் மற்றும் அதன் தளபதி ஜின்ஜின் உடன் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டது – இதுவழமையான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

குவாங்சோவை தளமாக கொண்ட 3999 தொன் சீயான் 6 கப்பல் தற்போது தென்சீன கடலில் உள்ளதாகவும் தற்போது தென்திசையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாரா என அழைக்கப்படும் இலங்கையை தளமாக கொண்ட அமைப்பின் விஞ்ஞானிகள் இலங்கையின்  விசேட பொருளாதார வலயத்திற்கும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த கப்பலில் ஏற உள்ளனர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன கப்பல் அம்பாந்தோட்டை கொழும்பு துறைமுகங்களில் ஒருமாதகாலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதி இலங்கை விஞ்ஞானிகள் இன்றியே இடம்பெறும்

இந்த விடயங்கள் குறித்து இந்தியாவின் சவுத்புளொக் கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்ற அதேவேளை இந்தியா இந்த விவகாரத்தை உயர் இராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்தியாவின் இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணவேண்டியது ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமே என்ற நிலை காணப்படுகின்றது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவாங்வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றது. இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியிலும் கப்பலுக்கு அனுமதிவழங்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகம் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீன இராணுவத்தின் கடற்படை மிகவேகமாக தன்னை விஸ்தரித்துவரும் – சர்வதேச நோக்கங்களை கொண்டுள்ள நிலையில் இந்து சமுத்திரபிராந்தியத்தில் உள்ள நாடுகள் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு எதிராக செயற்படுவதற்கு மோடி அரசாங்கம் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கும் என்பதே முக்கியமான கேள்வி?

மனிதாபிமான பேரிடர் கொரோனா தடுப்பூசி பொருளாதார உதவி என இந்தியா மிக நெருக்கமாக நின்று உதவிகளை வழங்கிய நாடுகள் தொடர்பிலேயே இந்த கேள்வி முக்கியமானது.

முன்னைய சீனா ஆதரவு ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பயனற்ற வீண் செலவான திட்டங்களிற்கு உயர் வட்டியுடன் சீனா நிதி உதவியை வழங்கிய போதிலும் சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல்களை இலங்கை அனுமதிப்பது இலங்கை புதுடில்லியின் கவலைகள் கரிசனைகள் குறித்து கவலையற்று இருப்பதை வெளிப்படுத்துகின்றது.

குவாட் மற்றும் ஆசியானின் ஏனைய நாடுகளை எதிர்கொள்வதற்கான எதிர்கால அணுவாயுத யுத்தத்திற்காக  சீனா இந்தோ பசுபிக்கை ஆராய்ந்து வருகின்றது என்பது வெளிப்படையான விடயம்.

கடந்காலங்களில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இந்தோனேசியாவின் ஒம்பிவெட்ஸ்டார் நீரிணை ஊடாக இந்து சமுத்திரத்திற்குள் நுழைந்து தென் இந்திய சமுத்திரத்தை நோக்கி சென்றன. மலாக்க சுன்டா மற்றும் லொம்பொக் நீரிணைகள் நீர்மூழ்கிகளின் பயணத்திற்கு உகந்தவையில்லை.

ஆனால் ஒம்பி வெட்டார் நீரிணையின் ஊடாக நீர்மூழ்கிகள் பயணிப்பது சுலபம்.

நீர்மூழ்கியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளிள் வீரியம் மற்றும் துல்லியத்தை பரிசோதனை செய்வதற்காகவே – கடல்தளம் உப்புதன்மை மேற்பரப்பு வெப்பநிலை என்பவற்றை சீனா ஆராய்கின்றது.

மேற்பரப்பு மற்றும் துணைமேற்பரப்பு வெப்பநிலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு காரணமாக என்ற நிலையேற்படுகின்றது,இதனால் ஆழமான நீரில் தாக்குதல் நீர்மூழ்கிகளை கண்டறிவது சாத்தியமற்றது.

இந்து சமுத்திரத்தில் இந்திய கடற்படையின் டீசல் தாக்குதல் நீர்மூழ்கிகள் எந்த சீன கப்பலிற்கும் சவால் விடுக்ககூடியவையாக காணப்படுகின்றன.

தென்இந்திய சமுத்திர கடலில் சீனா ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது- இந்திய ஆதிக்கத்தில் உள்ள கடற்பரப்புகளில் இருந்து வேறுபாதையை உருவாக்க சீனா முயல்கின்றது – மேலும் கிழக்கு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள சீனாவின் நேசநாடுகளிற்கு வேகமாக சென்றடைவதற்கான பாதையை உருவாக்கவும் சீனா விரும்புகின்றது.

தமிழர்களை பழி வாங்குவதாக நினைத்து இலங்கை விடயங்களின் இராசதந்திர விடயங்களை இந்தியா கவனிக்க தவறி நிற்பது இந்தியாவின் பிராந்திய நலனுக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியுமென்ற விடயத்தை உணர்ந்தும் உணராமல் உள்ளது இந்தியா. இவ்விடயம் “சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” என்ற மன நிலையையே காட்டுகின்றது.

Tags: இலங்கைஇந்தியாசீனாகப்பல்அம்பாந்தோட்டைவருகை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

லிபியாவில் அரசை கைப்பற்றும் நடவடிக்கை- கடுமையான மோதல் : 27 பேர் உயிரிழப்பு..மோதல் தொடர்கின்றது …

அடுத்த செய்தி

புகழ்பெற்ற தமிழீழப் பாடகர் வரதன் ஆசிரியர் இயற்கை எய்தினார்….

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.
by Stills
14/08/2025
0

அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசுஅதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின்...

மேலும்...

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி
by Stills
14/08/2025
0

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை...

மேலும்...

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!
by Stills
14/08/2025
0

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல்...

மேலும்...

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!
by Stills
01/08/2025
0

24.07.2025ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை "பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு சபாநாயகர்...

மேலும்...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட தீர்மானம்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட தீர்மானம்.
by Stills
01/08/2025
0

எதிர்வரும் திங்கட்கிழமை (04) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு  தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய...

மேலும்...

மன்னாரில் கத்தி முனையில் போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்!

மன்னாரில் கத்தி முனையில்  போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்!
by Stills
01/08/2025
0

நேற்று வியாழக்கிழமை (31)  தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவர்   மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில்  மாலை மன்னாரில்...

மேலும்...
அடுத்த செய்தி
புகழ்பெற்ற தமிழீழப் பாடகர் வரதன் ஆசிரியர் இயற்கை எய்தினார்….

புகழ்பெற்ற தமிழீழப் பாடகர் வரதன் ஆசிரியர் இயற்கை எய்தினார்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

14/08/2025
பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

14/08/2025
பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

01/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us