ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து தனது நாடு உணர்வுபூர்வமாக செயற்படும் என இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு உறுதிவழங்கி ஒரு மாதத்திற்குள் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நிற்கப்போகின்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒக்டோபரின் பிற்பகுதி முதல் நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் அம்பாந்தோட்டை கொழும்பு துறைமுகங்களில் தங்கிநிற்க்கும்-இதுவரை இலங்கை அரசாங்கம் அந்த கப்பலிற்கு அனுமதிவழங்கவில்லை.
ஏற்கனவே சீன இராணுவத்தின் ஹய் யங் 24 ஹாவே கப்பல் 138 பணியாளர்கள் மற்றும் அதன் தளபதி ஜின்ஜின் உடன் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டது – இதுவழமையான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.
குவாங்சோவை தளமாக கொண்ட 3999 தொன் சீயான் 6 கப்பல் தற்போது தென்சீன கடலில் உள்ளதாகவும் தற்போது தென்திசையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாரா என அழைக்கப்படும் இலங்கையை தளமாக கொண்ட அமைப்பின் விஞ்ஞானிகள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்கும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த கப்பலில் ஏற உள்ளனர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன கப்பல் அம்பாந்தோட்டை கொழும்பு துறைமுகங்களில் ஒருமாதகாலம் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதி இலங்கை விஞ்ஞானிகள் இன்றியே இடம்பெறும்
இந்த விடயங்கள் குறித்து இந்தியாவின் சவுத்புளொக் கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்ற அதேவேளை இந்தியா இந்த விவகாரத்தை உயர் இராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்தியாவின் இந்த கரிசனைகளிற்கு தீர்வை காணவேண்டியது ரணில்விக்கிரமசிங்க அரசாங்கமே என்ற நிலை காணப்படுகின்றது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவாங்வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றது. இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியிலும் கப்பலுக்கு அனுமதிவழங்கப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகம் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீன இராணுவத்தின் கடற்படை மிகவேகமாக தன்னை விஸ்தரித்துவரும் – சர்வதேச நோக்கங்களை கொண்டுள்ள நிலையில் இந்து சமுத்திரபிராந்தியத்தில் உள்ள நாடுகள் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு எதிராக செயற்படுவதற்கு மோடி அரசாங்கம் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கும் என்பதே முக்கியமான கேள்வி?
மனிதாபிமான பேரிடர் கொரோனா தடுப்பூசி பொருளாதார உதவி என இந்தியா மிக நெருக்கமாக நின்று உதவிகளை வழங்கிய நாடுகள் தொடர்பிலேயே இந்த கேள்வி முக்கியமானது.
முன்னைய சீனா ஆதரவு ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பயனற்ற வீண் செலவான திட்டங்களிற்கு உயர் வட்டியுடன் சீனா நிதி உதவியை வழங்கிய போதிலும் சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல்களை இலங்கை அனுமதிப்பது இலங்கை புதுடில்லியின் கவலைகள் கரிசனைகள் குறித்து கவலையற்று இருப்பதை வெளிப்படுத்துகின்றது.
குவாட் மற்றும் ஆசியானின் ஏனைய நாடுகளை எதிர்கொள்வதற்கான எதிர்கால அணுவாயுத யுத்தத்திற்காக சீனா இந்தோ பசுபிக்கை ஆராய்ந்து வருகின்றது என்பது வெளிப்படையான விடயம்.
கடந்காலங்களில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள் இந்தோனேசியாவின் ஒம்பிவெட்ஸ்டார் நீரிணை ஊடாக இந்து சமுத்திரத்திற்குள் நுழைந்து தென் இந்திய சமுத்திரத்தை நோக்கி சென்றன. மலாக்க சுன்டா மற்றும் லொம்பொக் நீரிணைகள் நீர்மூழ்கிகளின் பயணத்திற்கு உகந்தவையில்லை.
ஆனால் ஒம்பி வெட்டார் நீரிணையின் ஊடாக நீர்மூழ்கிகள் பயணிப்பது சுலபம்.
நீர்மூழ்கியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளிள் வீரியம் மற்றும் துல்லியத்தை பரிசோதனை செய்வதற்காகவே – கடல்தளம் உப்புதன்மை மேற்பரப்பு வெப்பநிலை என்பவற்றை சீனா ஆராய்கின்றது.
மேற்பரப்பு மற்றும் துணைமேற்பரப்பு வெப்பநிலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு காரணமாக என்ற நிலையேற்படுகின்றது,இதனால் ஆழமான நீரில் தாக்குதல் நீர்மூழ்கிகளை கண்டறிவது சாத்தியமற்றது.
இந்து சமுத்திரத்தில் இந்திய கடற்படையின் டீசல் தாக்குதல் நீர்மூழ்கிகள் எந்த சீன கப்பலிற்கும் சவால் விடுக்ககூடியவையாக காணப்படுகின்றன.
தென்இந்திய சமுத்திர கடலில் சீனா ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது- இந்திய ஆதிக்கத்தில் உள்ள கடற்பரப்புகளில் இருந்து வேறுபாதையை உருவாக்க சீனா முயல்கின்றது – மேலும் கிழக்கு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள சீனாவின் நேசநாடுகளிற்கு வேகமாக சென்றடைவதற்கான பாதையை உருவாக்கவும் சீனா விரும்புகின்றது.
தமிழர்களை பழி வாங்குவதாக நினைத்து இலங்கை விடயங்களின் இராசதந்திர விடயங்களை இந்தியா கவனிக்க தவறி நிற்பது இந்தியாவின் பிராந்திய நலனுக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியுமென்ற விடயத்தை உணர்ந்தும் உணராமல் உள்ளது இந்தியா. இவ்விடயம் “சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” என்ற மன நிலையையே காட்டுகின்றது.