“ஆற்றல்”
ஆற்றல்கள் பலவற்றை
ஆட்கொண்ட ஆத்மா
ஆயிரம் கனவோடு
ஆர்பரிக்குது ஓர்ஜீவன்.
ஏதேனும் ஓர்சக்தி
எப்படியும் அமைந்திருக்கும்
எத்தனையோ சக்திகளை
எப்படித்தான் கொண்டீரோ…
ஒவ்வொன்றும் ஓர்சக்தி
ஒவ்வொரு ஆற்றலுக்கும்
ஓர்ஒளி வடிவமுண்டு
ஒளிர்கிறது தினம்தோறும்…
பன்முகத் திறனாலே
பாரினில் பலவடிவம்
பக்கங்கள் ஒவ்வொன்றும்
பண்புகளை காட்டிடுதே…
நிறைகுடம் தழும்பிடுமோ
நிறைமதி ஞானமுடன்
நிலாப்பெண் தேய்கிறாள்
உன்றன் நினைவாளே…
இப்படியும் ஓர்ஜீவன்
இத்தரணியில் எப்படி
இதயமற்று தடமாறியது
இன்னுமே கனவுதான்…
அத்துணைக்கும் காரணம்
அவரின் ஆற்றல்மிகு
அற்புத செயல்கள்தான்
அடிமையாக செய்தனவே…
-அபிராமி கவிதன்🙏🏻