சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார்.
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், சமீப காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு இவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகள் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி நடிகை தீபா ஆவார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.