பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிலையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான வழக்கு பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று இருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகிய இருவருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இருவரையும் கைது செய்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.