இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட6,000 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தபடுவதாக கூறப்படுகிறது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் சுங்க வரிகள் மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களில் 100 வீதமானவை சுங்கப் பிரிவினரால் பரிசோதிக்கப்படுவதில்லை , ஆபத்தான கொள்கலன்களே இங்கு பரிசோதிக்கப்படும், சோதனை செய்யப்படாத கொள்கலன் ஊடாகவே வாகனம் நாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் .
கொள்கலன்களை பரிசோதிக்கும் அதிகாரிகளின் போதாமையினால் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் பரிசோதிப்பதில்லை இதனால் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் வருடமொன்றுக்கு 350 முதல் 400 பில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டும் திறன் சுங்கத்திற்கு உண்டு.
அடுத்த வருடம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வித நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது