Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

மஹிந்தவின் கடமைகளிலிருந்து அதிகாரிகள் பணி நீக்கம்.!

Stills by Stills
14/12/2024
in இலங்கை
0
மஹிந்தவின் கடமைகளிலிருந்து அதிகாரிகள் பணி நீக்கம்.!
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

நேற்று (13) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக  இருந்த116 பாதுகாப்பு அதிகாரிகள்  கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது.இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.அதிகாரிகளின் எண்ணிக்கை அனுரா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விடைபெறும் முன்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்க்ஷவுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவிடம் பல வருடங்களாக இருந்த முக்கிய அதிகாரிகள் உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்புக்கு பொலிஸாரால் வருடாந்தம் செலவிடப்பட்ட தொகை 32 கோடி 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்.
இலங்கையின் உயரடுக்கு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் செயற்படுவதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை முறையான மதிப்பீட்டின் பின்னரே பாதுகாப்பை குறைத்துள்ளது.
வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாஅதன்படி முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது கூடும் குழு, பாதுகாப்பு மதிப்பீடு அறிக்கைகளை வரவழைத்து, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை திருத்தும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், முப்படைகளின் ஆயுதப்படை அதிகாரிகளும் அவர்களின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களும் மீளாய்வு செய்யப்பட்டு வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60 ஆக திருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags: அதிகாரிகள்கடமைகளிலிருந்துநீக்கம்பணிமஹிந்தவின்
ShareTweetShareShareSendSend
Previous Post

சபாநாயகர் பதவி இராஜினாமாசெய்தார் அசோக ரன்வல.!

Next Post

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 6000 விசாரணையில்!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 6000 விசாரணையில்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 6000 விசாரணையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us