யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தாவடி கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் தேசிக்காய், பீடி, தீப்பெட்டி, பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை காணப்படுவதால் போதையில் கைகளை தானே வெட்டியதால், இரத்த போக்கு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.