Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

Stills by Stills
09/09/2023
in ஈழம்
0
முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!
0
SHARES
14
VIEWS
ShareTweetShareShareShareShare

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை  இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவருக்கு போலி பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகைமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மோசடி நபர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளில் சித்தியடையவில்லை என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நாளை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Tags: ஆசிரியர்கைதுசான்றிதழ்போலிமுல்லைத்தீவு
ShareTweetShareShareSendSend
Previous Post

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

Next Post

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!

தமிழ்த்தேசிய பேரவை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!
by Stills
19/12/2025
0

நேற்று வியாழக்கிழமை (18) தமிழக முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு அவரது இல்லத்தில் இரவு...

Read more

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் – ஒரு வரலாற்றுப் பார்வை
by கண்ணன்
15/12/2025
0

டிசம்பர் 14, 2025 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியரும், இராஜதந்திரியுமான 'தேசத்தின் குரல்' அன்டன் பாலசிங்கம் அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் இன்று...

Read more

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்
by Stills
28/11/2025
0

இயக்கப்பெயர்  :-பொட்டு அம்மான் சொந்தபெயர்    :-சண்முகநாதன் சிவசங்கர் பிறப்பு                  :- 28.நவம்பர்.1962 இறப்பு   ...

Read more
Next Post
இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us