2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. இதில் மொத்தம் 26 கட்சிகள் பங்கேற்ற நிலையில் புதிய கூட்டணி உருவாகி உள்ளது. மேலும் அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது. நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்னும் சில தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தான் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அதாவது பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய கூட்டத்தில் பெயர் வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது. நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்னும் சில தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தான் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அதாவது பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இன்றைய கூட்டத்தில் பெயர் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி கட்சிகள் தொகுதிகளை பிரித்து கொள்வது, கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுப்பது, அடுத்தக்கட்டமாக ஆலோசனை கூட்டத்தை எப்போது நடத்துவது? என்பது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போதைய காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து 2024ம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. I-N-D-I-A என்பதற்கு Indian National Developmental Inclusive Alliance என்று பொருள். தமிழில் கூற வேண்டும் என்றால் ‛‛இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி” என அழைக்கலாம்.