இந்தியா, இலங்கை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் தமிழர்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். நல்ல நேரத்தில் பொங்கல் வைப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும்.கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 06.30 முதல் 07.30 பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்குவது சிறப்பு.7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். எம கண்டம், குளிகை நேரம் தவிர்த்து நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினால் செல்வம் பெருகும்.. வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.