இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் இடம்பெயர்ந்துள்ள மக்களும் ஒரு மணிநேரத்திற்குள் வெளியேறவேண்டும் என இஸ்ரேல் காலக்கெடுவிதித்துள்ளதை தொடர்ந்து மருத்துவமனைக்குள் பெரும் குழப்பநிலையேற்பட்டுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்குள் என இஸ்ரேல் காலக்கெடு விதித் துள்ளதை தொடர்ந்து மருத்துவமனைக்குள் பெரும் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
இஸ்ரேலினால் தொடர்ச்சியாக குண்டுவீச்சிற்குட்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ள மருத்துவமனையில் 7000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர் இதனால் இஸ்ரேலின் உத்தரவின் படி வெளியேறுவது சாத்தியமில்லை என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசாவின் தென்பகுதிக்கு நோயாளிகளை குறிப்பிட்ட மாதத்திற்கு முன்னர் பிறந்த குழந்தைகளை இடமாற்றுவதற்கு போதிய அம்புலன்ஸ்கள் இல்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஒருமணித்தியாலத்திற்குள் வெளியேற்றுவதையே நெருக்கடி என்கின்றோம் என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு எதிராக மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதியில் துல்லியமாகத் தாக்குதலை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் .