யாழ்ப்பாணம் நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரப் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் துப்பாக்கி ரவைகள் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நெடுந்தீவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியை பெற்ற பின்னர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 750 இற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெடுந்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு
இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry...
மேலும்...