வீரன் என்றும் வீழ்வதும் இல்லை சாவதும் இல்லை.. எம்மனங்களில் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பொட்டம்மானுக்கு இன்று அகவை 62 நினைவுடன் உறவுகள்..ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான வழி சுயமாகப் போராடி, சுயமாக வலுவாகிக்கொள்ளுதல் என்ற தத்துவத்தை உலகின் முன் நிறுவிக்காட்டிய பெருமையினாலேயே எங்கள் தலைவர் உச்சமான பெருமையைப் பெறுகின்றாரென நான் கருதுகின்றேன்.
காலம் வெற்றிடங்களை அனுமதிக்காது. உயர்ந்த விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் அழிக்கப்பட்டபோதும் விடுதலைக்கான மூச்சு நின்றுவிடுவதில்லை என்பதை இந்த உலக வரலாறும் மனிதகுல வரலாறும் திரும்பத் திரும்பக் கூறிவந்திருக்கிறது. அது எமது தாய் மண்ணில் மடிந்த மாவீரர் பெயரால் நிச்சயம் நிகழும்.
-ச.பொட்டு-
.
பொட்டு அம்மான்… தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர்.. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நிழல். தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே முப்படைகளையும் வைத்திருந்தவர் பிரபாகரன். குறைவான எண்ணிக்கையில் விடுதலைப் புலிகள் இருந்த போதும் அந்த இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவு அபாரமாக செயலாற்றியது.அப்படியான புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக செயல்பட்டவர் பொட்டு அம்மான். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில்…..!வீரர்கள் என்றும் வீழ்வதும் இல்லை சாவதும்இல்லை..எம்மனங்களில் என்று வாழ்ந்துகொண்டிருக்கும்,
போரின் முடிவில் தலைவர் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.என்பதும் உண்மை அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். என்பது தவறு தலைவர் பிரபாகரனுக்கு பொட்டு அம்மான் பாதுகாப்பாளன்,மட்டும் அல்ல தம்பியுமாக வாழ்ந்தவர் அவர்……நான் உயிருடன் இருக்கும் வரை தலைவருக்கு எதுவும் நடக்கவிடமாட்டேன் என்பது பொட்டம்மானின் வாசகம். தலைவர் வீரச்சாவு அடைந்த்த பின் பொட்டு உயிருடன்இல்லை என்பதே நிஜம். விடுதலைப்புலிகள் தலைவரையும்,தளபதிகளையும் இராணுவம அழிக்கவில்லை தங்களைதாங்களே அழித்துக் கொண்டார்கள் என்பதே நிஜம்
இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையை தாய் நாடுக்குக்காக கொடுத்தவர். இரு முறை பிறநாடுகளின் தூண்டுதலில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட இருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர். பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்! வீரர்கள் என்றும் வீழ்வதும் இல்லை சாவதும் இல்லை.. எம்மனங்களில் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பொட்டுஅம்மானுக்கு இன்று அகவை 62 பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..!