வரலாறுகாணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்றுமாலை 4மணிக்கு நல்லடக்கம் என தீர்மாணிக்கப்பட்டிருந்த்தது அனால் 5.45 மணியளவில்தான் கோயம்பேடுவந்தடைந்த ஊர்தி இந்நிலையில், தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் செல்லும் பாதை நெடுகிலும், ஏராளமான மக்கள் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி பாலத்தில் மேல்நின்று மலர் தூவிஅஞ்சலி செலுத்தும் மக்கள் வெள்ளம் கண்ணீர் சொரிந்து கைகூப்பி நிற்கும் மகன் விஜய்பிரபாகரன் காட்சி மெய்சிலிர்க்க வைத்து நீந்திச்சென்றது
புரட்சிக்கலைஞன் கப்டன் விஜயகாந்த் என சந்தனப்பெலையில் பொறிக்கப்பட்டு முதலமைச்சர் அமைச்சர்கள் முன்னிலையில் 6.5மணியளவில் அரசமரியாதை 24 பேலீசார்அணிவகுப்பு செய்து 72 வேட்டுக்கள்முழங்க முதல்மரியாதையுடன் கோயம்போட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில்மகன்கள் இருவரும்கண்ணீர்மல்க இறுதிச்சங்குகள் செய்து நல்லடக்கம் 7.5மணியளவில் விதைக்கப்பட்டார்..
நேற்று காலை (டிச.28) காலைஉயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களின் கூட்டம் அலை மோதியதால் விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.